அதிகம் நீர் அருந்தினால் உடலுக்கு நன்மையா, தீமையா - தமிழர்களின் சிந்தனை களம் அதிகம் நீர் அருந்தினால் உடலுக்கு நன்மையா, தீமையா - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

      Saturday, July 16, 2011

      அதிகம் நீர் அருந்தினால் உடலுக்கு நன்மையா, தீமையா





      அதிகமாக தண்ணீர் குடித்தால் உடலுக்கு மோசமான விளைவு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
      அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் சிறுநீரக பாதிப்பு தவிர்க்கப்படும், உடல் எடை குறையும் மற்றும் நினைவுத்திறன் அதிகரிக்கும் என கூறப்பட்டது. ஆனால் தினமும் 3 கோப்பை தண்ணீரை அருந்துவது சரியல்ல என கிளாக்சோவை மையமாக கொண்ட ஜி.பி.மார்க்ரேட் கூறுகிறார்.

      தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து மிகைப்படுத்தப்படுகின்றன. அதிக அளவு தண்ணீர் குடிப்பது இரவில் நேரத்தில் சரியல்ல என்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை அடிக்கடி குடிப்பதும் சரியல்ல என்றும் அவர் கூறுகிறார்.
      பிரிட்டன் தேசிய நலவாழ்வு சேவை ஆலோசனைப்படியும் ஊட்டச்சத்து நிபுணர்கள் மருத்துவர்கள் அறிவுரைப்படியும் தினமும் 1-2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

      உடலில் கலோரிகள் அதிக அளவில் எரிக்கவும் உடல் எடை குறையவும் தண்ணீர் உதவுகிறது. நீர்ச்சத்து குறைபாடு காரணமாக தலைவலி ஏற்படுகிறது. இந்த தலைவலியை போக்குவதற்கு தண்ணீரை போதிய அளவு குடிக்க வேண்டும். சிறுநீரக தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்க அதிக அளவு தண்ணீர் குடிப்பது நல்லது.
      நகங்களின் தன்மையை மேம்படுத்த தண்ணீர் உதவுகிறது. தோல் வறட்சி அடையாமல் தடுக்கவும் தண்ணீர் உதவுகிறது என்றும் தண்ணீரின் பலன் குறித்த முந்தய ஆய்வுகள் கூறுகின்றன
      • Blogger Comments
      • Facebook Comments

      0 comments:

      Item Reviewed: அதிகம் நீர் அருந்தினால் உடலுக்கு நன்மையா, தீமையா Rating: 5 Reviewed By: Unknown