சுகுணா பவுல்ட்ரி நிறுவனம் மிகக் குறைந்த கொழுப்பு சத்து கொண்ட 'டயட் சிக்கன்' என்ற கறிக்கோழி இறைச்சியை
அறிமுகப்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்த இந்நிறுவனம் 3,200 கோடி ரூபாய் மதிப்பிலான கறிக்கோகாழி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கோழி இறைச்சியில், உடல் நலத்திற்கு அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் உள்ளன. சாதாரண கோழி இறைச்சியில் 2.5 கிராம் கொழுப்பு உள்ளது. 'டயட் சிக்கன்'ல், இதை விட குறைவாக, 1.3 கிராம் என்ற அளவிலேயே கொழுப்பு உள்ளது.
இதில் உள்ள செறிவூட்டப்பட்ட செலினியம் (குறைவான கொழுப்பு)கூடுதல் பயனுள்ள உணவாகும். செலினோ புரோட்டீன்ஸ்-ன் ஒரு பகுதியான செலினியம், நோய் தடுப்பு நுணுக்கத்தை விரிவுபடுத்தி தைராய்ட் சுரப்பியின் செயல்பாடுகளை வரையறுக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ரத்தத்தில் 'கொலஸ்ட்ரால்' அளவை குறைக்க உதவுகிறது.
டயட் சிக்கனை அறிமுகப்படுத்திய, சுகுணா பவுல்ட்ரி நிறுவனத்தின் நுகர்வோர் பொருள்கள்(உணவு பிரிவு) பொது மேலாளர் மோகன் கூறுகையில், 'வாடிக்கையாளர்களின் தேவைகளை அடையாளம் கண்டு சுகாதாரத்தில் கவனம் செலுத்தி புதுமையான உணவுப் பொருள்களை உருவாக்கும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.கலோரி அளவில் கவனம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 'டயட் சிக்கன்' ஒரு புதுமையான உணவுப்பொருளாகும்' என்றார்.
0 comments:
Post a Comment