நாம் சாப்பிடும் உணவில் உப்பு அதிகரித்தால் இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு ஆகியவை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். ஆனால், ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே` என்ற தமிழ் பழமொழிக்கு ஏற்ப உணவில் உப்பின் அளவு குறைந்தாலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு, மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறைந்த உப்பு மிகை இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தாது என்று சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் மருத்துவர்கள் சங்க இதழில் இந்தத் தகவல் வெளியாகி
யுள்ளது. ஆனால், இந்தத் தகவலை சில நிபுணர்கள் மறுத்துள்ளனர். ‘அமெரிக்க மருத்துவர்கள் சங்கம்’ இரத்தக் கொதிப்பு, இருதய நோய், பக்கவாத நோய் தாக்காதவர்களிடம் ஆய்வு செய்து இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இது முடிவான ஆய்வு அல்ல`` என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்
0 comments:
Post a Comment