தமிழ்ச் சித்தர்கள் வகுத்த உடற்கூறு..!
Enlarge this image
நீண்ட நாள் வாழ்வது எப்படி?
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு
18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600
முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ
அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்!
எவ்வளவுக்கு எவ்வளவு
கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு
பாங்கில் பணம் சேமிப்பது போல. பாங்கிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால்
என்ன ஆகுமோ அதைப் போலத் தான் உயிர் வாழும் ஆண்டுகளும்.
இந்தத்
தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான
தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள்
அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64
விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று
சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன்
ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள்
நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.
திருமூலர் தனது பாடலில்:-
விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே
விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த
முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும்
பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600
ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.
ஆனால் வரவு
7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து
கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்.
பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்.
ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள். ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.
ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்
18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை
(இது சித்தர்களால் மட்டுமே முடியும்)
ஆமை ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கிறதாம். ஆயினும் அதற்குப் புற பத்துகள் அதிகம்.
ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம்
மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிரணவ மந்திர (ஓம்) ரகசியம் அறிந்தவர்களும்
நீண்ட நாள் வாழலாம்
http://www.usetamil.com/t31346-topic#49915

0 comments:
Post a Comment