கொய்யா, இந்தியா முழுவதும் பயிராகும் சிறு மரம். இதில் வெள்ளை கொய்யா, சிவப்பு கொய்யா என்று இரு வகையுண்டு. இரண்டின் பயன், மருத்துவ குணங்களும் ஒன்றேயாகும். கொய்யா மரத்தின் இலை,காய், பழம், பட்டை, வேர் ஆகியவை மருத்துவ பயன் உடையவை.
* 100 கிராம் கொய்யாவில் உள்ள சத்துக்கள்
ஈரப்பதம் 77 முதல் 86 கிராம்
நார்ச்சத்து 2.8 முதல் 5.5 கிராம்
புரதம் 0.9 முதல் 1 கிராம்
கொழுப்பு 0.1 முதல் 0.5 கிராம்
சாம்பல் சத்து 0.43 முதல் 0.7 கிராம்
கார்போஹைட்ரேட் 10 கிராம்
கால்சியம் 9.1 முதல் 17 மி.கிராம்
பாஸ்பரஸ் 17.8 முதல் 30 மி.கிராம்
இரும்புசத்து 0.30 முதல் 0.70 மி.கிராம்
கரோட்டீன் 200 முதல் 400 ஐ.யு.
தையமின் 0.046 மி.கிராம்
ரிபோப்ளேவின் 0.03 முதல் 0.04 மி.கிராம்
நியாசின் 0.6 முதல் 1.068 மி.கிராம்
விட்டமின் பி3 40 ஐ.யு
விட்டமின் பி4 35 ஐ.யு
மேலும் இதில் டெர்பினாய்டுகளும் கேலிக் அமிலமும் உள்ளன.
மருத்துவ பயன்கள்
* கனிகள் : மல மிளக்கி. குளுமையுடன் வலிமை தரும். குடல் மற்றும் ஈறுகளின் ரத்தக்கசிவை தடுக்கும். தற்காலிக உணர்வின்மை, தலைசுற்றல், இளைப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும். விந்து உற்பத்தியை அதிகப்படுத்தும். உடலில் உள்ள புழுக்களைப் போக்கும்.
* பட்டை : உடலில் உள்ள பாக்டீரியாவை போக்கும். காய்ச்சலை நீக்கும்.
குழந்தைகளின் வயிற்றுப் போக்கை நீக்கும்.
* இலை : இலையைக் குடிநீரில் போட்டுவைத்து அருந்த, மூளையில் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். வலிப்பு நோயைப் போக்கும்.
இலையைக் கடித்து உண்ண பல்வலி தீரும். இலையை அரைத்து பற்றிட மூட்டுவலி, வாதம், புண் அடிப்பட்ட காயம் நீங்கும். இதன் இலையுடன் ஆடாதோடை இலை, மிளகு சேர்த்து குடிநீரில் இட்டு அருந்தினால் இருமல், ஆஸ்துமா தீரும்.
பயன்படுத்தும் முறை
கொய்யாப் பழத்தை கொட்டை நீக்கி வெல்லம் சேர்த்து அப்பம், தோசை, ரொட்டியுடன் உண்ணலாம்.
மலச்சிக்கல் தீர ஒரு துண்டு கொய்யாப் பழமே போதுமானது.
இலை பொடியை தேனுடன் சேர்த்து சாப்பிட வாந்தி தீரும்.
இதன் பட்டை, அதிக உதிரப்போக்கை தடுக்கும்.
மூளையில் நரம்பு மண்டல பாதிப்பால் தோன்றும் வலிப்பு நோயைக் குணப்படுத்த கொய்யாவைப் பயன்படுத்தலாம்.
காயை வாரம் இரண்டு முறை உண்ண மலச்சிக்கல் தீரும்.
உடல் பருமனை நீக்கவும், கொழுப்பு சத்தைக் குறைக்கவும் தினம் ஒரு கொய்யாவைத் தொடர்ந்து சாப்பிட ஒரு மாதத்தில் நல்ல பலனை பெறலாம்.
சீறுநீர நோயாளிகள் கொய்யாவைத் தவிர்ப்பது நலம்.
0 comments:
Post a Comment