மனதும், உடலும் பாதிக்கப் பட்டால் முதலில் வருவது தலைவலியாகத்தான்
இருக்கும். அதீதமான மன அழுத்தம் முதலில் தலைவலியைத்தான் கொண்டு தரும்.
மன அழுத்தம் மட்டுமல்லாது, கண் , காது, பல் போன்ற உறுப்புகளில் உண்டாகும் பாதிப்புகள் கூட தலைவலிக்கு காரணமாய் அமையும். அதிகமான வெயில் அல்லது மழையில் நனைவதாலும் தலை வலி உண்டாகும்.
தலைவலி உண்டாக இப்படி பல காரணங்கள் இருந்தாலும் இவற்றிர்கான அடிப்படை தீர்வுகள் எளிமையானவையே....
மன அழுத்தம் தீர தனிமனித ஒழுக்கம், யோகம் போன்றவை உதவும்.
உடல் தூய்மை, முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவை தீர்வாக இருக்கும்.
பொதுவான தீர்வுகள் இப்படி இருந்தாலும், தலைவலிக்கான மருந்துகள் பலவும் சித்தர்களினால் அருளப் பட்டிருக்கிறது.
சுக்கை அரைத்து, அதில் எலுமிச்சம்பழம் சாறு விட்டு குழைத்து நெற்றியில் பூச தலைவலி நொடியில் குணமாகும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.
மற்றொரு பாடலில்
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஒரு படி, பசுவின் பால் ஒரு படி, அதில் கம்பஞ் சோறு நீர் சேர்த்து ஆதொண்டை இலைச்சாறு ஒரு படியும் சேர்த்து இரண்டு பலம் மிளகையும் உடைத்து போட்டு இதனை அடுப்பிலேற்றி மிளகு மிதக்கும் பக்குவத்தில் காய்ச்சி வடித்து எடுத்து பின்னர் அந்த மிளகாய் அரைத்து அதில் சேர்த்து அதிகாலையில் இந்த எண்ணெய் பூசி முழுகி பின்னரே உணவு உண்ண வேண்டும் இப்படி செய்தால் கடுமையான தலைவலி தீர்வதுடன் தலைவலி வராது என்கிறார் புலிப்பாணி.

0 comments:
Post a Comment