கர்ப்பிணித் தாய்மார்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்! - தமிழர்களின் சிந்தனை களம் கர்ப்பிணித் தாய்மார்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, February 27, 2013

    கர்ப்பிணித் தாய்மார்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

    கர்ப்பிணித் தாய்மார்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்!


    * கர்ப்ப காலத்தில் கரும்பச்சை நிறமான கீரைவகைகளையும், காரட் போன்ற காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * கர்ப்பிணிகள் கடினமான பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஆட்டோவில் பயணம் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். பஸ்ஸில் கடைசி இருக்கை என்றால் வேண்டவே வேண்டாம். மலைப்பிரதேசப் பயணம் ஏற்கத்தக்கதல்ல. விமானப் பயணமும் அப்படித்தான்.

    * உடலுக்குத் தேவையான மிக அத்தியாவசியமான சத்துக்களில் ஒன்று அயோடின். பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சியின்மை, உடல்வளர்ச்சிக் குறைவு போன்றவற்றுக்கு இந்த சத்துக்குறைவுதான் காரணம். இதனால் குழந்தையின் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.


    * கருவுற்ற முதல் சில மாதங்கள் வாந்தி அதிகம் இருந்தால், சிறுகச் சிறுக உணவைக் குறைந்த இடைவெளியில் உட்கொள்ளலாம்.

    * ஒரு பெண் கருவுறும்போது மூன்றாம் மாதத்தில் கருவிலுள்ள குழந்தையின் பற்களின் அஸ்திவாரம் தோன்ற ஆரம்பிக்கும். அந்நேரத்தில் கர்ப்பிணிகள் கால்சியம், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளையும், பாலையும் பருகுவது அவசியம்.

    * தாய்மை அடைந்தவர்கள், மாம்பழம், பலாப்பழம், சாத்துக்குடி, எலுமிச்சை ஆகிய பழங்களை உட்கொள்ளக்கூடாது. இதனால் இருமல், சளி ஏற்படலாம்.

    * மருத்துவரின் ஆலோசனையின்றி கர்ப்பிணிகள் எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது.

    * அதிக மசாலாப் பொருள்கள் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்கவும்.

    * தினமும் இரண்டு தம்ளர் பால் குடிக்க வேண்டும்.

    * தினமும் நன்கு நடக்க வேண்டும். அப்போது தான் பிரசவம் எளிதாகும்.

    * மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். இனிமையான, மெலோடி பாடல்களை கேட்கலாம்.


    நன்றி:http://www.seithy.com
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: கர்ப்பிணித் தாய்மார்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top