அடித்துவிடுங்கோ” இவ்வாறு கேட்டு வருபவர்கள் சிலர் இருக்கிறார்கள்.
ஒரு
சிலருக்கு இது உண்மையான மருத்துவத் தேவையாக இருந்த போதும் பலருக்கு அது தேநீர்
குடிப்பது போல ஒரு பழக்கமோ என நான் எண்ணுவதுண்டு.
“ஒரு தேத்தண்ணி
குடிச்சால்தான் உசார் வரும்” என்பது போல ஒரு ஊசி அடித்தால்தான் அவர்களுக்கு மனம்
சார்ந்த உற்சாகம் வருவதுண்டு.
இது அவ்வாறிருக்க, வயதானவர்களின் இரத்தத்தில்
B12 அளவு குறைவாக இருந்தால் மூளையின் கலங்கள் சிதைவடைவதற்கும், மூளையின் அளவு
சுருங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக அண்மையில் வெளியான ஒரு ஆய்வு
கூறுகிறது.
மூளையின் கலங்கள் சிதைவதானது அறிவார்ந்த செயற்பாடுகளில்
தாக்கத்தை ஏற்படுத்தும். முதுமையில் மறதி, அறளை பெயர்தல், அல்ஸீமர் நோய் போன்றவை
நீங்கள் அறியாதல்ல. ஆயினும் இந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டு விற்றமின் B12
குறைபாடுதான் அறிவார்ந்த செயற்பாடுகள் மந்தமாவதற்குக் காரணம் என்று அறுதியாகச்
சொல்ல முடியாதுள்ளது.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்டரோல்
அதிகரித்தல் ஆகியனவும் மூளை பாதிப்படைவதற்கு முக்கிய
காரணங்களாகும்.
விற்றமின் B12 குறைபாடுதான் காரணம் எனச் சொல்ல முடியாததற்கு
ஆதாரம் இதுதான்.
107 வயதானவர்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு இது. அதன்போது
ஆரம்பத்திலும் வருடாவருடமும் அவர்களுக்கு வழமையான மருத்துவப் பரிசோதனை, இரத்தப்
பரிசோதனை, அவர்களின் அறிவார்ந்த செயற்பாடுகள் பற்றிய மதிப்பீடு, முளையின் பொருன்மிய
நிலையை அறிய MRI பரிசோதனை ஆகியன செய்யப்பட்டன.
அவர்கள் எவரது இரத்தத்திலும்
B12 ன் அளவானது வழமையாக எதிர்பார்க்கப்படும் சாதாரணத்தை விடக் குறைவாக
இருக்கவில்லை. அதாவது அவர்களுக்கு இரத்தத்தில் டீ12 குறைபாடு இருக்கவில்லை. ஆயினும்
ஆய்வின் முடிவில், சாதாரண அளவானதின் குறைந்த நிலையில் B12 இருந்தவர்களது மூளையின்
பருமனானது சாதாரண அளவானதின் உயர்ந்த மட்டத்தில் இருந்தவர்களை விட 6 மடங்கு
அதிகமாகக் குறைந்திருந்தது.
இதன் அர்த்தம் என்ன?
நாம் வழமையாக
எதிர்பாரக்கும் அளவை விட அதிகமான செறிவில் இரத்த B12 இருந்தால் முதுமையில் மூளை
சுருங்குவது குறைவு என்பதாகும். எனவே எமது உணவில் B12 அதிகமுள்ள உணவுகளைச்
சேர்த்துக் கொள்வது நல்லது. முதியவர்களுக்கு இது மேலும் முக்கியமாகும். இறைச்சி,
மீன், பால் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
தாவர உணவுகளில்
விற்றமின் B12 இல்லாததால் தாவர உணவு மட்டும் உண்போர் விற்றமின் B12குறைபாட்டிற்கு
ஆளாவதற்கான சாத்தியங்கள் அதிகம். பாலூட்டும் தாய்மார், பாலகர்கள், மற்றும்
முதியவர்களுக்கு இவ்விற்றமின் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியம்
அதிகமாகும்.
பேரனீஸியஸ் அனிமியா Pernicious anaemia எனப்படும் ஒரு வகை
இரத்தசோகை அதனால் ஏற்படும். நாக்குப் புண்படுதல், தோல் வெளிறல், பசியின்மை,
அடிக்கடி ஏற்படும் வயிற்றோட்டம், மாதவிடாய் கோளாறுகள், நோயெதிர்ப்புச் சக்தி
குறைதல் ஆகியன அதன் அறிகுறிகளாகும்.
அத்துடன் நரம்புகள் பாதிப்படைவதால் கால்
கை விரல்களில் வலிப்பது போன்ற உணர்வு, கால்தசைகளில் வலி, தள்ளாட்டம், மாறாட்டம்
போன்ற நரம்பு சார்ந்த அறிகுறிகளும் ஏற்படலாம்.
விற்றமின் குறைபாட்டை
குணமாக்குவதற்கு விற்றமின் B12 ஊசியாகப் போடுவதே ஒரு வழி. ஆயினும் மூளை
சுருங்குவதைத் தடுப்பதற்கு ஊசி தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு B12 குறைபாடு
இருக்கவில்லை.
அத்துடன் அவ் ஆய்வானது அவர்களுக்கு ஊசி போடுவது பற்றியோ,
மேலதிக B12 கொடுப்பதால் ஏதாவது நன்மை ஏற்படுமா என்பது பற்றியோ பரிசோதனை எதையும்
செய்யவில்லை.
எனவே வயதானவர்கள் மேற் கூறிய உணவுவகைகளை சற்று அதிகமாக உண்டால்
போதுமானது.
0 comments:
Post a Comment