நீரிழிவு – உணவு முறை. - தமிழர்களின் சிந்தனை களம் நீரிழிவு – உணவு முறை. - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, May 12, 2010

    நீரிழிவு – உணவு முறை.

    நீரிழிவு சிகிச்சையில் உணவு முதலிடத்தை வகிக்கிறது.
    நவீன மருத்துவத்தில் நீரிழிவுக்காரர்களுக்கு உணவில் கட்டுப்பாடுகள்
    இருப்பதால் நமது பாரம்பரிய உணவு முறைகள் மறைந்து போயுள்ளது. ஆனால் தமிழ்
    நாட்டிலுள்ளவர்களுக்கு உணவு முறையை மாற்றியமைக்க வேண்டியதில்லை. ஏனென்றால்
    நம்நாட்டு மக்களின் சராசரி உணவு பழக்கத்தில் மாவுச்சத்தும் நார்ச்சத்தும்
    நிறைந்த உணவாகத்தான் பரிமாரப்படுக்கிறது.

    உணவுக்கட்டுப்பாடு
    என்றாலே பலர் அச்சம் கொள்கின்றனர்.இந்த உணவு முறை சிகிச்சை மிகவும்
    சிக்கலானது என்றே பெரும்பாலான நீரிழிவுக்காரர் தவறாக கருதி கொள்கின்றனர்.
    உண்மையில் இது மிக மிக எளிதான முறை இதில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய 2
    விதிகள்


    1. எந்த உருவிலும் சர்க்கரையை சாப்பிடக் கூடாது.
    2. மொத்த கலோரி(calorie) அளவைக் கட்டுப்படுத்துதல்.


    நீரிழிவுக்காரர்களின்
    எதிரி என்று சொல்லப்படும் அரிசி உணவையே அவர்கள் சாப்பிடலாம். ஏன்னென்றால்
    கோதுமை, இராகி, அரிசி இம்முன்றிலுமே ஒரே அளவு மாவுச்சத்து இருப்பதே
    காரணம். வெள்ளை அரிசியை விட கைகுத்தல் அரிசியே சிறந்தது.ஆனால் உட்கொள்ளும்
    அளவை குறைத்து கொள்ளவேண்டும்.சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள
    மணிச்சம்பா அரிசி (சந்தையில் உள்ள மூல்கிரி அரிசி),பல்வேறு
    ஆய்வுகளுக்குட்படுத்தப்பட்டு(Low Glycemic Index) நீரிழிவுக்குச்
    சிறந்த்து என்று நிருபிக்கப்பட்டுள்ளது.


    நீரிழிவுக்கார்ர்களுக்கென்று
    வீட்டில் தனியாக சமையல் தேவையில்லை.மற்றவைகளுக்கு சமைக்கப்படும் உணவையே
    சாப்பிடலாம்.அரிசி உணவு குறைவாகவும்,கீரை,காய்கறிகள் போன்ற நார்ச்சத்து
    மிகுந்த சத்துள்ள உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
    காய்கறிகள்
    நீரிழிவுக்கார்ர்களின் தோழர்கள்.தரைக்குக்கீழ் வளரும கிழங்கு சாப்பிடக்
    கூடாது. இரண்டு சாப்பாட்டிற்கிடையில் வயிற்றை நிரப்புக் கூடிய
    மோர்,சூப்,எலுமிச்சை பழச்சாறு, தக்காளிச்சாறு மற்றும் தக்காளி
    வெள்ளரிக்காய் சாலட்அதிகமாக சாப்பிட வேண்டும். மதுப் பழக்கத்தையும்
    நொறுக்குத் தீனி திண்பதையும் அடியோடு நிறுத்த வேண்டும்.


    உணவு அட்டவணை


    சாப்பிடக் கூடாது.

    1. சர்க்கரை.
    2. கரும்பு.
    3. சாக்லெட்.
    4. குளுக்கோஸ்.
    5. காம்பளான்.
    6. குளிர் பானங்கள்.
    7. சாம் வகைகள்.
    8. பால் கட்டி.
    9. திரட்டுப்பால்.
    10. பனிக்கூழ்.
    11. வாழைப்பழம்.
    12. பலாப்பழம்.
    13. மாம்பழம்.
    14. நுங்கு.
    15. சப்போட்டா.
    16. சீதாப்பழம்.
    17. உலர்ந்த திராட்சை.
    18. சேப்பங்கிழங்கு.
    19. உருளைக்கிழங்கு.
    20. சர்க்கரைவள்ளிக்கிழங்கு.



    அளவோடு சாப்பிடலாம்.

    1. கம்பு.
    2. ஓட்ஸ்.
    3. அரிசி.
    4. அவல்.
    5. இரவை.
    6. பார்லி அரிசி
    7. சோளம்.
    8. மக்காச் சோளம்.
    9. கேழ்வரகு.
    10. கோதுமை.
    11. பாதாம் பருப்பு.
    12. முந்திரிப் பருப்பு.
    13. வேர்க்கடலை.
    14. பிஸ்தா பருப்பு.
    15. வால் நட்.


    அளவில்லாமல் சாப்பிடலாம்.

    1. பாகற்காய்
    2. சுரைக்காய்.
    3. வாழைத்தண்டு.
    4. வெள்ளை முள்ளங்கி.
    5. தக்காளி.
    6. கொத்தவரங்காய்.
    7. காராமணி.
    8. வெள்ளரிக்காய்
    9. அவரைக்காய்.
    10. முருங்கைக்காய்.
    11. கீரை.
    12. கண்டங்கத்திரி.
    13. கோவைக்காய்.
    14. வெங்காயம்.
    15. பூசணிக்காய்.
    16. கத்திரிக்காய்.
    17. வாழைப்பூ.
    18. பீர்க்கங்காய்.
    19. பப்பாளிக்காய்.
    20. வெண்டைக்காய்.
    21. முட்டைக்கோஸ்.
    22. நூல்கோல்.
    23. கோவிப்பூ.
    24. சீமை கத்திரிக்காய்.

    THANKS:http://drnatarajansiddha.blogspot
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: நீரிழிவு – உணவு முறை. Rating: 5 Reviewed By: Unknown