நாம் உபயோகிக்கும் மருந்துகளில் உயிரை எடுக்கும் மாத்திரைகள் - தமிழர்களின் சிந்தனை களம் நாம் உபயோகிக்கும் மருந்துகளில் உயிரை எடுக்கும் மாத்திரைகள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, May 12, 2010

    நாம் உபயோகிக்கும் மருந்துகளில் உயிரை எடுக்கும் மாத்திரைகள்

    m
    ஜலதோஷத்தினால் ஒழுகிக் கொண்டிருக்கும் மூக்கை நிறுத்த நீங்கள் ‘டிவி’க்களின் ஒளிபரப்பாகும் விளம்பரங்களைப் பார்த்து சில மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடலாம். அந்த மாத்திரைகளால் ஜலதோஷத்திலிருந்து நீங்கள் உடனடியாக விடுதலை பெறுவதோடு, உங்கள் தலைவலியும் கூடப் பறந்து போகும். ஆனால், அந்த மாத்திரைகளால் உங்களுக்கு பக்கவாதநோய் வரலாம்.

    உங்கள் நம்பிக்கைக்கு உரிய குடும்ப டாக்டரின் உத்தரவின் பேரில் அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைவுகளைத் தீர்க்க நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு மினி மருந்துக்கடையை வைத்திருக்கலாம். அப்படி மாத்திரைகளை வாங்கி வைத்திருப்பது அவசரத்திற்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படிப்பட்ட மாத்திரைகளால் சில அல்ல பெரிய தீங்குகள் ஏற்படுகின்றன என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    தலைவலிக்காக டாக்டர்கள் மட்டுமின்றி நம் வீட்டுப் பெரியவர்களான தாத்தா, பாட்டி பரிந்துரை செய்யும் மாத்திரையான ‘அனால்ஜின்’ மாத்திரையால் Bone marrow depression நோய்கள் ஏற்படலாம்.

    பயணங்களின் போது உங்களின் வயிறு ஏதாவது ஏடாகூடம் ஆகி நடுவழியில் தொந்தரவு கொடுக்காமல் தடுக்க Quiniodochior என்ற மாத்திரையை உங்கள் டாக்டர் பரிந்துரை செய்யலாம். அந்த மாத்திரையால் உங்கள் கண் பார்வை பறிபோகலாம்.

    Nimesulide வயிற்றுப்போக்கை சரி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மாத்திரையால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த மாத்திரையில் உள்ள ஆசிட் இருதயத் துடிப்பின் சீர்குலைவுக்கும் காரணமாகலாம்.

    பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த மாத்திரைகளை நீங்கள் வாங்கி வைத்துக் கொள்ளும்படி டாக்டர்களும், மருந்துக் கடைக்காரர்களும் பரிந்துரை செய்தால் அதற்காக யாரும் இந்த மாத்திரைகளை வாங்க முடியாது. ஏனெனில், ஜலதோஷம், இருமலுக்காக கொடுக்கப்படும் இந்த மாத்திரைகளால் பக்கவாதம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. அதனால் அனைத்து வடஅமெரிக்க நாடுகளிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இந்த மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அல்லது தயாரிப்பது கைவிடப்பட்டுள்ளது.

    யேல் பல்கலை., மருத்துவப் பள்ளியைச் சேர்ந்தவர்கள், 702 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஐந்து ஆண்டு ஆய்வில், ‘பிபிஏ’ வினால் ஏற்றுக்கொள்ளமுடியாத பல பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை சாப்பிட்டு சிறிய அளவிலான உடல் நலக் குறைவு ஏற்பட்ட பின்னரே, அதற்கான அறிகுறிகள் ஏற்பட்ட பின்னரே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனால், மாற்று மருந்துகள் கண்டுபிடிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ‘பிபிஏ’ வினால் ஏற்படுவது மட்டுமின்றி, சர்க்கரை நோய் ஒருவரை விரைவில் பாதிக்கவும், கிளகோமா Prostaste enlargementக்கும் இது காரணமாக அமைகிறது.

    இந்த மாத்திரையால் ஏற்படும் தீங்கு காரணமாக, இவற்றை தங்கள் நாட்டில் தடை செய்யத் தவறியதற்காக கொரிய உணவு மற்றும் மாத்திரைகள் நிர்வாக ஆணையர் ஷிம் சாங்-கூ சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    குழந்தைகள் நல நிபுணரும், இந்திய குழந்தைகள் நல அகடமியின் தலைவருமான டாக்டர் டி.எஸ்.ஜெயின் கூறியதாவது:

    சில மருந்துகளை, மாத்திரைகளை டாக்டர்கள் மட்டுமே பரிந்துரை செய்யமுடியும். ஆனால், அதே மருந்துகள் மற்றும் மாத்திரைகள் தகவல் தொடர்பு சாதனங்களால் விளம்பரம் செய்யப்படும்போது, அந்த மாத்திரைகளால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை டாக்டர்கள் யாரும் நோயாளிகளுக்கு சொல்வதில்லை. மாத்திரைகள் பற்றி விளம்பரம் செய்யும் நிறுவனங்களும் சொல்வதில்லை. அதுபோன்ற மாத்திரைகளால் நோயாளிகளின் ரத்தஅழுத்தம் அதிகரிப்பதோடு இருதய நோய்களும் உண்டாகின்றன. சாதாரண நபர்களுக்கு இதுபோன்ற மாத்திரைகளால் பெரிய அளவில் கூட பிரச்னைகள் ஏற்படலாம்.

    மிகவும் நம்பிக்கையான பிரபலமான ‘அனால்ஜின்’ மாத்திரையை அனைவரும் அறிந்ததே. மிக பிரபலமான வலி நிவாரணியான இந்த மாத்திரை அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனிதவளத் துறையால் தடை செய்யப்பட்டுள்ளது. 1977ம் ஆண்டே இந்த மாத்திரைக்கு அந்நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    நமது அண்டை நாடான நேபாளத்தில் கூட இந்த மாத்திரை விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு கூட இந்த மாத்திரை மற்றும் மருந்தைப் பயன்படுத்தக் கூடாது என அமெரிக்கா 1995ம் ஆண்டில் தடை விதித்துள்ளது. ஆனால், இந்தியாவில் ஆயிரக்கணக்கானவர்கள் Bone marrow depression உருவாக்கும் இந்த மாத்திரையை இன்னும் வலி நிவாரணியாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

    இதுமட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் தடை செய்யப்பட்டு இன்னும் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள மற்றொரு மாத்திரை cisapirde. இந்த மாத்திரையை சாப்பிடு வதால் முறையற்ற, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஏற்பட்டு பலர் மரணம் அடைய நேரிடும். 1998ம் ஆண்டிலேயே இந்த மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு தடைவிதித்துள்ளது.

    இதயத் துடிப்பு சீராக இல்லாத 341 பேரிடம் விசாரித்ததில் அவர்கள் சிசாபிரைடு மாத்திரை யை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இவர்களில் 80 பேர் 1999ம் ஆண்டு டிசம்பர் 31ல் மரணம் அடைந்தனர். இதனால், இந்த மாத்திரையை ஸ்பெசலிஸ்ட்கள் மட்டுமே பரிந்துரைக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த மாத்திரை 28 இதர மாத்திரை மற்றும் மருந்து களுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்படக் கூடியது. அதனால், இதயத்துடிப்பு சீராக இல்லாத நோயாளிகள் இருதய நோய் உள்ளவர்கள், இ.ஜி.ஜி., சரியாக இல்லாதவர்கள், சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள், நுரையீரல் நோய் உள்ள வர்கள், ரத்தத்தில் குறைந்த அளவு கால்சியம், பொட்டாசியம் அல்லது மெக்னீசியம் கொண்டிருப்பவர்கள் இந்த மாத்திரை வாங்கி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மருந்து தயாரிப்பாளர்கள் இந்த மாத்திரை உற்பத்தியை 2000ம் ஆண்டு ஜீலை 14ம் தேதி முதல் நிறுத்தியுள்ளனர்.

    ஏற்றுக்கொள்ள முடியாத பல பக்க விளைவுகள் ஏற்படுவதால் சிசாபிரைடு உற்பத்தியை பிரிட்டிஷ் மருத்துவக் கவுன்சில் நிறுவனம் 2000ம் ஆண்டு ஆகஸ்டில் தடை செய்தது. இந்த மாத்திரை சாப்பிட்டவர்களால் 60 சதவீதம் பேருக்கு இருதய சம்பந்தமான நோய்கள் உருவாகியதே இதற்கு காரணம். ஆனால் இந்தியாவில் உள்ள டாக்டர்கள் இந்த மாத்திரையை பெரும்பாலான நேரங்களில் நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கின்றனர். இ.ஜி.ஜி., ரத்தப் பரிசோதனை எதுவும் மேற்கொள்ளாமல் பரிந்துரை செய்கின்றனர். தகுதி வாய்ந்த கேஸ்ட்ரோ என்டரோலா ஜிஸ்ட்கள் மட்டுமே இந்த மாத்திரையை பரிந் துரை செய்யவேண்டும் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    எந்த வகையிலும் இந்த மாத்திரை விற்பனையை அதிகரிப்பதில் உற்பத்தியாளர்கள் ஈடுபடக்கூடாது என்றும் கூறியுள்ளது. அதை பெரும்பாலான டாக்டர்கள் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. சிசாபிரைடு எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியது என்பதையும் பெரும்பாலான நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் நம்ப மறுக்கின்றனர்.

    மருந்துகளில் சில
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: நாம் உபயோகிக்கும் மருந்துகளில் உயிரை எடுக்கும் மாத்திரைகள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top