படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? - தமிழர்களின் சிந்தனை களம் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, May 12, 2010

    படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?

    படுக்கையில்
    சிறுநீர் கழிக்கும் நோயை ஆங்கிலத்தில் என்யூரிசிஸ் என்று மருத்துவர்கள்
    அழைக்கிறார்கள். குழந்தைகள் படுக்கை, உடைகள் அல்லது பொருத்தமற்ற இடங்களில்
    தன்னிச்சையாகவோ அல்லது அனிச்சையாகவோ சிறுநீர் கழித்துவிடுவதே இந்நோயாகும்.
    அல்சீமர் என்னும் நோயோ அல்லது பிற வகையான மறதி நோயால் பாதிக்கப்பட்ட
    பெரியவர்களும் படுக்கை அல்லது உடைகளில் சிறுநீர் கழிக்கும் நோய்
    கொண்டுள்ளனர். பகலிலும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளும்
    இருந்தாலும். பெரும்பாலும் இறவிலேயே படுக்கையில் சிறுநீர் கழிக்கும்
    இந்நோய் கிருஸ்து பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
    காணப்படுகிறது. குழந்தை வளர வளர இந்நோய் தானாகவே சரியாகிவிடும். அல்லது
    சிகிச்சையின் மூலம் சரியாக்கி விடலாம். ஒரு சில குழந்தைகள் படுக்கையில்
    சிறுநீர் கழிப்பதை ஐந்தாறு மாதங்கள் நிறுத்தி பின் மீண்டும் தொடரும்
    வாய்ப்புகளும் உண்டு. பொதுவாக ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்
    படுக்கையில் சிறுநீர் கழித்தால் தான் அது பிரச்சனை. ஐந்து வயதுக்குற்பட்ட
    குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் அது நோயல்ல. அது பற்றி
    கவலைப்பட தேவையில்லை.

    படுக்கையில் சிறுநீர் கழிக்க குறிப்பிட்ட
    உடலியல் அல்லது உளவியல் காரணத்தை தனித்து கூற இயலாது. பல காரணிகள் கூட்டாக
    இந்நோயை தோற்றுவிக்கின்றன. இந்நோய் உள்ள ஒரு சில குழந்தைகளினால்
    சிறுநீரகமும், சிறுநீர் பையும் சற்றே பிறழ்வான செயல்பாடுகளை கொண்டுள்ளதாக
    கண்டறியப்பட்டுள்ளது. அதைப் போன்றே சிறுநீர்பை நிறைந்து விட்டதை சற்றே
    தாமதமாக உணர்ந்து கொள்ளும் நரம்பு மண்டலமும் இந்நோய்க்கு காரணமாக
    அமைகிறது. மேலும் பெற்றோர் சிறுவயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும்
    நோயை கொண்டிருந்ததும் குடும்பத்தில் யாரேனும் பிற உறுப்பினர்கள் இந்நோய்
    கொண்டிருந்ததும் தற்போது குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்க காரணமாக
    இருக்கலாம். குழந்தையின் மனதில் ஏதேனும் ஒரு மன அழுத்தத்தை
    உண்டாக்கக்கூடிய நிகழ்வு பதிந்திருப்பது படுக்கையில் சிறுநீர் கழிக்க
    காரணமாக அமைக்கிறது. பொதுவாக படுக்கையில் சிறுநீர் கழிப்பது வேறு ஏதோ ஒரு
    மனப்பிரச்சனையின் அறிகுறியாகும்.

    படுக்கையில் சிறுநீர் கழிக்கும்
    குழந்தைகள் அவமானமும், பிறர் முன் தலைகுனிவும் கொள்வர், ஏணிப்படுக்கையில்
    படுப்பதையும் தவிர்ப்பர். தனித்திருத்தல், பிறருடனான பொருத்தப்பாட்டு
    பிரச்சனைகள், குறைவான தன்-மதிப்பு ஆகியவை படுக்கையில் சிறுநீர் கழிக்கும்
    குழந்தைகளின் பிற உளவியல் பிரச்சனைகளாகும். எனவே இந்நோய்களுக்கு சிகிச்சை
    அளிப்பது அவசியமாகும்.

    வெளிநாட்டில் இந்நோயை குணப்படுத்த அறிவியல்
    தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நவீன சிகிச்சைகள் அளிக்கின்றனர்.
    குழந்தையின் உள்ளாடையில் ஓர் அல்ட்ரா சவுண்ட் கருவியை பொருத்திவிடுவர்.
    இக்கருவி குழந்தையின் சிறுநீர்ப்பையின் அளவை கண்காணிக்கும். சிறுநீர்ப்பை
    முழு அளவை எட்டியவுடன் எச்சரிக்கை மணியை இக்கருவி எழுப்பும் உடனடியாக மணி
    சத்தம் கேட்ட குழந்தை எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டு வரலாம்.

    இன்னொரு
    முறையில் குழந்தையின் உள்ளாடையில் எச்சரிக்கை மணியுடன் கூடிய பஞ்சடை (pad)
    வைக்கப்படும். எப்போதெல்லாம் இப்பஞ்சடை ஈரமாகிறதோ அப்போதெல்லாம்
    எச்சரிக்கை மணி ஒலிக்கும். உடனே குழந்தை எழுந்து சென்று சிறுநீர் கழித்து
    விட்டு வரும். நாளடைவில் மணி அடிக்காமலேயே எழுந்து சென்று சிறுநீர் கழிக்க
    குழந்தை கற்றுக் கொள்ளும்.

    படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த பின்வரும் சில எளிமையான முறைகளை நாம் கையாளலாம்.

    இரவில்
    கடிகாரத்தில் குறிப்பிட்ட நேர இடைவெளிக்கு எச்சரிக்கை மணி ஓசை எழுப்பச்
    செய்து, குழந்தையை விழிக்க வைத்து, கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழிக்க
    வைத்து விட்டு வரலாம். சில நாட்கள் இவ்வாறு செய்தால் விரைவில் குழந்தை
    தானாக எழுந்து சென்று சிறுநீர் கழிக்க பழகிக்கொள்ளும்.

    குழந்தைகள் தூங்கப் போக சில மணி நேரம் இருக்கும்போது நீரோ அல்லது பிற திரவ உணவுகளையோ கொடுப்பதை தவிர்க்கவும்.

    பெற்றோர்
    குறிப்பிட்ட இடைவெளியில் சில மணி நேரத்திற்கு ஒருமுறை குழந்தையை எழுப்பி
    “சிறுநீர் கழிக்க வேண்டுமா” என வினவலாம். ஆம் எனில் கழிவறைக்குச் சென்று
    சிறுநீர் கழித்துவிட்டு வர உதவலாம்.

    சிறுநீர் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை பெற்றோர் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தலாம்.

    குழந்தைகள்
    இரவில் படுக்கையிலும் உடைகளிலும் சிறுநீர் கழிக்காத சமயங்களில்
    அந்நடத்தையை பாராட்டுவதும், சாக்லேட் போன்றவைகளை பரிசளிப்பதும் இந்நோயை
    விரைவில் குணமாக்கும்.

    படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை
    குணமாக்க மேற்சொன்ன எல்லா முறைகளை விட சிறந்த முறை பெற்றோர்கள்
    குழந்தைகளுக்கு அன்பையும் மனரீதியான அரவனைப்பையும் அளிப்பதுதான். THANKS:http://gestaltselvaraj.blogspot
    • Blogger Comments
    • Facebook Comments

    1 comments:

    wellgatamil said... May 12, 2010 at 8:42 AM

    நல்ல தகவல் வாழ்த்துக்கள்

    Item Reviewed: படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top