பழங்களைப் பச்சையாகவும், உலர வைத்தும் சாப்பிடலாம். பச்சைக்கனி மலமிளக்கும் தன்மையது. உடம்பின் உட்சூட்டை மாற்றக்கூடியது. சிறுநீரைப் பெருக்க வல்லது. குளிர்சியுண்டாக்கக் கூடியது. உலர்ந்த பழம் போஷாக்குச் சத்துடையது. இரத்தத்தைச் சுத்தம் செய்யவல்லது. மார்ச்சளியை நீக்கக்கூடியது.
கல்லீரலின் மந்த நிலையால் உண்டாகும் செரியாமை, அமிலத்தன்மை மிகுவதினால் ஏற்படும் செரிமானக் கோளாறு, இருதய நோய்கள், சூட்டு நமைச்சல், கடுப்புடன் கூடிய சிறுநீர்ப் போக்கு, சிறுநீர் சொட்டு சொட்டாய்க் கழிதல் ஆகியவற்றுக்கு திராட்சைச் சாறு சிறந்த மருந்தாகும்.
குழந்தைகளுக்குப் பல் முளைக்கும் வயதில் ஏற்படும் மலசிக்களுக்கும், அதனால் ஏற்படும் வலிப்பு நோய்களுக்கும் வேலைக்கு ஒரு தேக்கரண்டி திராட்சை ரசம் காலை, மாலை வேளைகளில் கொடுத்துவரக் குணமாகும்.
கனியை பன்னீரில் ஊறவைத்து அதன் சாற்றைப் பருகி வர இதயம் வலிமை பெரும். பன்னீர் திராட்சையை பாலுடன் கலந்து பருக குணமாகிறது.
நீடித்த ஜலதோஷத்திற்க்கும், மூக்கில் நீர் வடிவதற்கும் உலர்ந்த திராட்சை பலனளிக்கிறது.
சிறிதளவு உலர்ந்த திராட்சைப் பழத்தை இளஞ்சூடான நீரில் சுத்தம் செய்து, சிறிதுநேரம் பாலில் ஊரவைத்திருந்து காய்ச்சிப் பழத்துடன் பாலைப் பருக ஜலதோஷமும், நீரோழுகுதலும் குணமாகும்.
சுமார் ஓர் அவுன்ஸ் அளவுள்ள திராட்சையில் : 0.1 கிராம் வீதம் கொழுப்புச் சத்தும், 0.2 கிராம் வேதம் புரதப் பொருளும், 0.2 கிராம் கார்போ ஹைட்ரேட்டும், 6 மி. கி. வீதம் சுண்ணாம்புச் சத்தும், 0.1 மி. கி. வீதம் இரும்புச்
சத்தும், 6 மி. கி. வீதம் எரியச் சத்தும், வைட்டமின் பி – 1.11 மி. கி. வீதமும், 6 மி. கி. வீதம் வைட்டமின் ‘சி’ யும் இருக்கின்றன.
0 comments:
Post a Comment