அரசு மரம் ( மூலிகை மருத்துவம் ) - தமிழர்களின் சிந்தனை களம் அரசு மரம் ( மூலிகை மருத்துவம் ) - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Friday, September 10, 2010

    அரசு மரம் ( மூலிகை மருத்துவம் )

    கூரிய இலைகளையுடைய பெருமரம். ஊர் ஏரி, குளக்கரைகளில் புனித மரமாக வளர்க்கப்படுகிறது. தமிழகம் எங்கும் காணப்படுகிறது. கொழுந்து, பட்டை, வேர், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

    கொழுந்து வெப்பு அகற்றித் தாகந்தணிப்பானாகவும், விதை காமம் பெருக்கியாகவும், வேர், பட்டை ஆகியவை வீக்கம் குறைக்கும் மருந்தாகவும் பயன்படும்.

    1. துளிர் இலையை அரைத்துப் பற்றிடப் புண்கள் ஆறும்.

    2. வேர்ப்பட்டை 30 கிராம் 300 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி யாகக் காய்ச்சிப் பால் சர்க்கரை சேர்த்துப் பருகி வர வெட்டைச் சூடு, சொறி, தினவு, நீர்எரிச்சல், சிரங்கு ஆகியவை தீரும்.

    3. மரப்பட்டைத் தூள் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து புண் சொறிகளுக்குப் பூசக் குணமாகும்.

    4. பட்டைத் தூள் 2 சிட்டிகை நீரில் ஊற வைத்து வடிகட்டிக் கொடுக்க விக்கல், தொண்டைக் கட்டு, குரல்வளை நோய் தீரும்.

    5. அரசு விதைத் தூள் உயிர் அணுக்களைப் பெருக்கி ஆண் மலட்டை நீக்கும்.

    6. அரசங் கொழுந்தை குடிநீராக்கிக் குடிக்க சுரம், தாகம் ஆகியவை தீரும்.

    7. உலர்ந்த பழத்தை இடித்துப் பொடி செய்து 5 கிராம் வெந்நீரில் காலை, மாலை 20 நாள்கள் கொடுக்க சுவாசக் காசம் தீரும்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: அரசு மரம் ( மூலிகை மருத்துவம் ) Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top