பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் - தமிழர்களின் சிந்தனை களம் பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Tuesday, September 7, 2010

    பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம்

    பப்பாளிப் பழம் நீண்ட கால வயிற்றுப் போக்கிற்கு மருந்தாகவும், நீடித்த
    மலக்ச்சிக்களின் மலமிளக்கியாகவும் பயன்படக் கூடியது. மருந்துக் கடைகளில்
    விற்கப்படும் அலோபதி முறையில் தயாரிக்கப்பட்ட மலமிளக்கி மாத்திரைகள் அனைத்திலும்
    பப்பாளிப்பழத்தின் பங்கு ஏராளமாக உண்டு.
    மூல நோயுள்ளவர்கள் பப்பாளிப் பழத்தை தாராளமாகச் சாப்பிடலாம்.
    பப்பாளிப் பழம் மூலத்திலுள்ள சூட்டைத் தணிக்கக் கூடியது.
    இரத்தம் கொட்டும் மூலத்திற்கும் பலனளிக்க வல்லது. இருதயத்தைப் பலப்படுத்தக்
    கூடியது.
    ஏதாவதொரு காரணத்தினால் கல்லீரலோ, மன்நீரலோ சீர்கேடடைந்து அடிக்கடி காய்ச்சல்
    காணுவதுண்டு. கல்லீரலில் ஏற்படும் கோளாறுகள் நீடித்திருக்குமானால் அது அளவுக்கு
    மிஞ்சி வீக்கமடைந்து கெட்டிப்பட்டுவிடும். கல்லீரலில் ஓரளவுக்கு மேல் வாக்கமடைந்து
    விட்டால் அதைச் சீர் செய்வது அவ்வளவு சுலபமல்ல.
    கல்லீரல் வீக்க நோய்களுக்கு, காலை, மதியம் மற்றும் மாலை என்று மூன்று வேளைகளும்
    பப்பாளிப் பழத்தை 4 அவுன்ஸ் முதல் 8 அவுன்ஸ் வரை தின்று வந்தால் நல்ல பலன்
    ஏற்படும். பழத்தை உலர்த்தித் தூள் செய்தும் உபயோகித்து வரலாம்.
    பப்பாளிப் பழத்தோடு, சர்க்கரையும், எலுமிச்சம் பழச்சாறும் சேர்த்து போதுமான அளவு
    நீர் சேர்த்து பானம் தயாரித்து அருந்தலாம்.
    உடல் தெம்பையும், சத்துப் பொருட்களின் நிறைவையும் கொடுப்பதில் இதைவிட
    மிகச்சிறந்த பானம் இல்லை எனலாம்.
    கர்ப்பமடைந்துள்ள தாய்மார்கள் 4 மாதங்களுக்கு மேல் காலையில் எழுந்தவுடன் 3, 4
    அவுன்சுக்கு அதிகப்படாமல் பப்பாளிப் பழத்தை தினசரி உண்டுவரலாம். இதனால் வளரும்
    சிசுவிற்குப் போதிய ஊட்டச்சத்து கிடைக்கப் பெற்று குழந்தை அழகாகவும்,
    திடகாத்திரமாகவும் பிறக்கும்.
    பப்பாளிப் பழம் கருவைச் சிதைக்கும் என்ற எண்ணம் பொதுவாக எல்லாரிடமும் உள்ளது.
    இது தவறு. பப்பாளிப் பாலுக்குக்த்தான் அவ்விதக் குணமுண்டு, பழம் கருச்சிதைக்கும்
    என்பது தவறான கருத்தாகும். பப்பாளிப் பழம் ஒரு சிறந்த கிருமி நாசினி, செரிமானத்
    திறனை அதிகமாக்கும்.
    பப்பாளிப் பழத்துடன் தேன் கலந்து தினமும் சாப்பிட நரம்புத் தளர்ச்சி, நரம்பு
    வலி, நினைவாற்றல் குறைவு முதலியன நீங்கும்.
    நீரிழிவு நோய்க்கு பப்பாளிப் பழத்துடன் நாவல் பழத்தையும் சேர்த்துத் தொடர்ந்து
    சாப்பிட நோய் குணமாகும். ஆரம்ப கால வெண் குஷ்டத்தையும் பப்பாளிப் பழம்
    தடுக்கும்.
    சிறுநீர்த் தாரையில் ஏற்படும் கள்ளடைப்பைக் கரைக்க நான்கு தினங்கள் தொடர்ந்து
    பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் கல்லடைப்பு நீங்கும்.
    தொடர்ந்து பப்பாளிப்பழம் உண்பதினால் கண்ணொளி மிகும். மாலைக்கண் நோய் குணமாகும்.
    முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களை பப்பாளிப்பழம் கொண்டு அகற்றி
    அழகு பெறலாம்.
    நல்ல கனிந்த பப்பாளிப் பழத்தைத் துண்டுகலாக்கிக்கொண்டு முகம் எங்கும் நன்கு
    தேய்த்துச் சிறுது நேரம் ஊறிய பிறகு, குளிர்ந்த நீரில் அலம்பித் துடைத்து வர
    கரும்புள்ளிகள் மறையும், சுருக்கங்கள் அகலும், வதனம் சோபையுரும்.
    ஓர் அவுன்ஸ் பப்பாளிப் பழத்தில் உள்ள சத்துகள்
    சுண்ணாம்புச் சத்து 3 மி.கி., புரதசத்து 1 கிராம், கார்போ ஹைட்ரேட் 2.7 கிராம்,
    கொழுப்புச் சத்து 1 கிராம், 3 மி.கி. வைட்டமின் ஏ 573 சர்வதேச அலகு, வைட்டமின் பி –
    2, 71 மைக்ரோ கிராம், வைட்டமின் சி – 13 மி.கி., கலோரி மதிப்பு 11.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top