மூளையை பாதிக்கும் விடயங்கள் - தமிழர்களின் சிந்தனை களம் மூளையை பாதிக்கும் விடயங்கள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, October 22, 2011

    மூளையை பாதிக்கும் விடயங்கள்


    காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும்.
    இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.
    அதிகளவாகச் சாப்பிடுவதனால் மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
    புகை பிடிப்பதனால் மூளை சுருங்கவும், அல்ரஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. நிறைய இனிப்புச் சாப்பிடுவதனால் புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
    மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதனால் நமக்குத் தேவையான ஆக்சிஜனை பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்சிஜன் செல்லா விட்டால் மூளை பாதிப்படையும்.
    நல்ல உறக்கம் இல்லாமையால் மூளைக்கு ஓய்வு இல்லாமல் போகின்றது. தேவையான அளவு தூங்காமலிருப்பது நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
    தலையை மூடிக்கொண்டு நித்திரை செய்வதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறைக்கிறது.
    உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பிற்பாடு மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
    மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால் மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: மூளையை பாதிக்கும் விடயங்கள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top