நீரிழிவு நோயின் அறிகுறிகளும், முதலுதவியும் - தமிழர்களின் சிந்தனை களம் நீரிழிவு நோயின் அறிகுறிகளும், முதலுதவியும் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Tuesday, October 18, 2011

    நீரிழிவு நோயின் அறிகுறிகளும், முதலுதவியும்


    நீரழிவு நோயாளிகளுக்கு கொடுக்கப் படும் மருந்தானது அவர்களில் குருதியில் உள்ள சீனியின் அளவைக் குறைத்துக் கட்டுப் பாட்டிலே வைத்திருக்க உதவுகிறது.

    எல்லோரும் அறிந்தபடி குருதியில் குளுக்கோஸின் ( சீனியின்) அளவு அதிகரிப்பதே நீரழிவு நோய் எனப்படுகிறது.

    குருதியில் சீனியின் அளவு அதிகரிப்பது மட்டுமல்ல , சீனியின் அளவு குறைவது கூட பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது கைப்போ கிளைசீமியா(HYPOGLYCEMIA) எனப்படும்.

    குறிப்பாக நீரழிவு மாத்திரை எடுக்கும் ஒருவர் அந்த வேளை சாப்பிடாமல் விட்டால் அல்லது அதிகமான அளவிலே மாத்திரைகளை எடுத்தால் சடுதியாக சீனியின் அளவு குறைந்து விடலாம்.

    இவ்வாறு சீனியின் அளவு குறையும் போது ஒருவருக்கு கீழ் வரும் அறிகுறிகள் ஏற்படலாம்.....

    நெஞ்சு படபடப்பு
    வியர்த்தல்
    மயக்கம்
    தலைச்சுற்று
    தலையிடி
    உடலின் சில பகுதிகளில் உணர்வற்ற தன்மை
    பார்வை மங்குதல்
    வலிப்பு

    ஆகவே நீங்கள் நீரழிவு மாத்திர எடுத்து சில மணி நேரங்களில் இப்படி ஏதாவது அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக சீனி கலந்த ஏதாவது உட கொள்ளுவதன் மூலம் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

    சில வேளைகளில் நீரழிவு நோயாளிகள் சடுதியாக மயக்கமடைந்தாலோ அல்லது வலிப்பு ஏற்பட்டாலோ அருகிலே இருப்பவர்கள் அவர் வாயிலே குளுக்கோஸ் அல்லது இன் இனிப்பு ஏதாவதை போடுவது அவரை பாதுகாக்கும்.

    இவ்வாறான குணங்குறிகள் உண்மையில் சீனி குறைவானதால்தான் ஏற்பட்டது என்றால் இனிப்புக் கொடுத்து சில நிமிடங்களிலே அவர் சாதாரண நிலைக்கு வந்து விடுவார்.இவர்களை உடனடியாக (அவசரமாக ) வைத்திய சாலைக்கு எடுத்துப் போக வேண்டிய அவசியமில்லை.

    ஆனாலும் இனிப்பு போதியளவு கொடுத்தும் சாதாரண நிலைக்கு வராவிட்டால் இது வேறு காரணமாக இருக்கலாம் இப்படிப் பட்டவர்களை உடனடியாக வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

    நீரழிவு நோயாளிகள் மட்டுமல்ல அவரின் உறவினர்கள் கூட இதுபற்றி அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: நீரிழிவு நோயின் அறிகுறிகளும், முதலுதவியும் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top