ஓமியோபதி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பெல்லடோனா எனப்படும் மூலிகைத் தாவரம் மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா, மற்றும் ஐரோப்பாவினைச் சார்ந்த்தாகும்.
இதன் மருத்துவ பயன் கருதி உலகெங்கும் வளர்க்கப்படுகிறது. இது இரண்டு மீட்டர் உயரத்திற்கு மட்டுமே வளரும் பல பருவ குறுஞ்செடி. அகன்ற இலைகளைக் கொண்ட இந்த தாவரத்தின் இலைகள், வேர் மருத்துவ பயன் உடையவை.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் டிரோபென் ஆல்கலாய்டுகள், ஃபிளேவனாய்டுகள், கௌமெரின்கள், எளிதில் ஆவியாகும் காரங்கள் உள்ளன. டிரோபென் ஆல்கலாய்டுகளில் அட்ரோஃபைன் மற்றும் அயோசயமைன் முக்கியமானவை.
மூட்டு வலியை நீக்கும்
இத்தாவரம் கண் பாப்பாவினை விரியச் செய்யும். இதனை இத்தாலிய மகளிர் தங்களது கண்களை விரியச் செய்வதற்குப் பயன்படுத்தினர்.
இதன் காரணமாகவே இதன் சிற்றினப்பெயர் இத்தாலிய மொழியில் ‘அழகியப் பெண்மணி’ என்னும் பொருளில் அமைந்துள்ளது. தலைவலியை குணமாக்கும், வயிற்றுவலியை போக்கும்.
பெண்களுக்கு மெனோபாஸ் கால வலியை நீக்கும். ருமாய்டாய்டிசம் என்னும் மூட்டுப்பிரச்சினைக்கு மருந்தாகிறது. நரம்பு தொடர்புடைய நோய்களையும் நீக்குகிறது. ஹைபர் தைராய்டினால் ஏற்படும் அதிக வியர்வையை போக்கும்.
பக்கவாத நோய் குணமாகும்
பார்கின்ஸன் நோயில் ஏற்படும் கை, கால் உதறல் மற்றும் விறைப்புத் தன்மையினைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இது கைகால் இயக்கத்தினையும், பேச்சினையும் சரி செய்யும்.
இதயத்துடிப்பினையும் அதிகரிக்கிறது. இயங்கு தசைகளைக் கட்டுப்படுத்த வல்லது. இத்தாவரம் நல்ல தொரு மயக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது ஜீரண மற்றும் மூச்சுக்குழல் சுரப்புகளை கட்டுப்படுத்துகிறது.
வயிற்றுப் புண் சரியாகும்
இது தளர்ந்த உறுப்புகளை நல்ல நிலைக்குக் கொண்டு வரும். வயிறு மற்றும் குடல் பகுதி மீது செயல் புரிந்து குடல் வலியினைப் போக்கும்.
பெப்டிக் எனப்படும் வயிற்றுப் புண் குணமடைய உதவுகிறது. ஜீரண அமிலங்கள் சுரப்பினைக் கட்டுப்படுத்தும். சிறுநீர் நுண் குழல்களின் பிடிப்பு வலியினை நீக்குகிறது.
0 comments:
Post a Comment