வெங்காயப் பூவில் மறைந்திருக்கும் பெறுமதிமிக்க மருத்துவ குணங்கள் - தமிழர்களின் சிந்தனை களம் வெங்காயப் பூவில் மறைந்திருக்கும் பெறுமதிமிக்க மருத்துவ குணங்கள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Monday, October 24, 2011

    வெங்காயப் பூவில் மறைந்திருக்கும் பெறுமதிமிக்க மருத்துவ குணங்கள்


    சுவைக்காக மட்டுமின்றி வெங்காயம் வியக்கத்தக்க மருத்துவ ரீதியாகவும் பயன்படுகிறது. நன்கு வளர்ந்த வெங்காயம் சமையலில் எவ்வாறு உதவுகிறதோ அதேபோல வெங்காயச் செடியில் உள்ள பூக்களும் மனிதர்களின் நோய் போக்கும் மருத்துவ குணம் கொண்டவையாகும்.

    வெங்காயத்தையும், வெங்காயப்பூவையும் சேர்த்து அரைத்து ஒரு அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காசநோய் குணமடையும்.

    வெங்காயப்பூக்களையும் வெங்காயத்தையும், பொடியாக நறுக்கி தயிரில் ஊறப்போட்டு சாப்பிட மூலம் தொடர்புடைய எரிச்சல், குத்தல் குணமடையும்.

    கண்நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாக இருப்பவர்கள் வெங்காயப்பூவைக் கசக்கி சாறு பிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறு காலை, மாலை கண்களில் விட்டு வர மூன்று நாட்களில் கண்பார்வை தெளிவடையும்.

    பல்வலியால் அவதிப்படுபவர்கள் சம அளவு வெங்காயம் மற்றும் வெங்காயப்பூ எடுத்து அரைத்து சாறு பிழிந்து தினமும் வாய்கொப்பளித்து வர பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்கள் குணமடையும்.

    ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூ எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும். வெங்காயப்பூ நன்றாக வெந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொள்ள வயிற்று வலி உடன் நிற்கும்.

    வெங்காயம் சேர்த்து சமைக்கும் உணவுகளில் வெங்காயத்திற்கு பதிலாக வெங்காயப்பூவையும், வெங்காயத்தாளையும் சிறியதாய் நறுக்கிப் போட்டு சேர்க்கலாம். இது பசியை தூண்டும்.

    குடலில் உள்ள தேவையற்ற வாயுவை அகற்றும். வெங்காயப் பூவினை ஏதாவது ஒரு வகையில் பக்குவம் செய்து சாப்பிட கீழ் வாதம் குணமடையும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: வெங்காயப் பூவில் மறைந்திருக்கும் பெறுமதிமிக்க மருத்துவ குணங்கள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top