காலில் வலி, எரிச்சல் என்றால் அது காலோடு சம்பந்தப்பட்டது என்று சும்மா இருக்காதீர்கள். அது உயர் ரத்தக் கொதிப்பின் அறிகுறி என்கிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு.
நாற்பது வயதைத் தாண்டிய பெண்களுக்கு காலில் வலி, குடைச்சல், எரிச்சல் ஏற்படுவது உண்டு. தூங்கும்போதும் விழித்திருக்கும்போதும் காலை ஒரே மாதிரி வைத்திருக்க முடியாமல் காலை அசைத்தும் நீட்டியும் மடக்கியும் கால் வலியைக் குறைக்க முடியுமா என்று பார்ப்பது வழக்கம்.
இது பகல் முழுக்க நின்றும் நடந்தும் வேலை செய்வதால் ஏற்படுவது என்றே பெண்கள் நினைக்கின்றனர். ஆனால் இது ரத்தக் கொதிப்பின் அடையாளம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
ரத்தத்தில் இரும்புச்சத்தின் அளவு குறைந்தாலோ, சாப்பாட்டுப் பழக்கத்தில் மாறுதல் இருந்தாலோ, இரவில் தூக்கம் கெட்டாலோ, உடல் எடை அதிகரித்தாலோ, புகையிலை, மதுபானப் பழக்கம் இருந்தாலோ கூட இந்த கால் வலியும் எரிச்சலும் குடைச்சலும் ஏற்படுவது உண்டு.
ஆனால் கால் வலி, எரிச்சலுக்கு அதிகக் காரணம் உயர் ரத்த அழுத்தமாக இருக்கக்கூடும் என்பதால் இந்த அறிகுறி உள்ள பெண்கள் உடனே மருத்துவரை அணுகி ரத்த அழுத்தம் எப்படி இருக்கிறது என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது என்று பாஸ்டனில் உள்ள ஹார்வர்டு மருத்துவப்பள்ளியைச் சேர்ந்த சல்மா படூல் அன்வர் அறிவுறுத்துகிறார்.
உயர் ரத்த அழுத்தமாக இருக்கலாம் என்ற உடனேயே அச்சம் வேண்டாம், சில வேளைகளில் சாதாரண மருந்து மாத்திரைகளிலேயே இதை கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.
இரும்புச் சத்து மிகுந்த கீரைகள், காய்கறிகள், பழங்களைச் சாப்பிட்டாலும் டானிக்குகளாலும் கால் வலியையும் போக்கிக்கொள்ளலாம், ரத்தக் கொதிப்பையும் அதிகரிக்க விடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
இப்போதைய ஆய்வு 2005 முதல் 97,642 பெண்களைத் தொடர்ந்து கவனித்து அவர்களிடம் கேள்வி கேட்டு பதிவு செய்த பதில்களின் அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment