வயது கூடுவதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க............! - தமிழர்களின் சிந்தனை களம் வயது கூடுவதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க............! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, January 11, 2012

    வயது கூடுவதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க............!

    வயது ஏற ஏற... 'முக வரி’கள் மாறும். உச்சி முதல் உள்ளங்கால் வரை’ மாற்றங்கள் தலைதூக்கும். வயது கூடுவதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க இதோ சில வழிகள்...





    1.மூளை 
    'க்ரீன் டீ நல்ல சாய்ஸ். க்ரீன் டீ தொடர்ந்து குடித்தால் ஞாபக மறதி நோயில் இருந்து தப்பிக்கலாம். இந்த டீயில், ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 'பாலிபினால்’  (Polyphenols) உள்ளதால், உணவு செரிமானத்துக்கும் உதவுகிறது. அப்போலோ மருத்துவமனை நியூரோ சர்ஜன் டாக்டர் ஆர்.ராம்நாராயண் கூறுகையில், ''மூளை என்பது முழுக்க முழுக்கப் புரதத்தால் ஆனது. அது இயங்க புரதம் மிக மிக அவசியம். பக்கவாதத்தால் வருபவர்களிடம்கூட நிறைய புரதம் உள்ள உணவை எடுத்துக்கொள்ளும்படி கூறுகிறோம். எனவே, அதிகப் புரதம் மற்றும் குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவை உண்டால் மூளை என்றும் இளமையாக இருக்கும்'' என்றார்.
    2. இதயம்
    'நீண்ட நேரம் டி.வி. முன்னால் அமர்ந்து இருப்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள்அதிகம்’ என்கிறது சமீபத்திய ஆய்வு. டி.வி. பார்க்கும்போதோ அல்லது கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போதோ, சுவாரஸ்யத்தில் அதிகக் கொழுப்பு உள்ள நொறுக்குத் தீனிகளை சிலர் சாப்பிட்டுவிடுவது உண்டு. ஆனால், இந்தக் கொழுப்பை எரிக்கும் அளவுக்கு துடிப்பான உடல் உழைப்பு ஏதும் இல்லாத சூழலில் இதயம் பலவீனப்படும். எனவே, அதிக நேரம் டி.வி-யின் முன்பு இருப்பதைத் தவிர்ப்பதே முதுமையைத் தள்ளிப்போடுவதற்கான வழி.
    3. கண்கள்
    தொடர்ந்து கண்களுக்கு ஓய்வே இல்லாமல் வேலை இருந்தால், கண்களின் தசைகள் வலுவிழந்து, கண் சோர்வு, கண்ணில் நீர்வடிதல், தலைவலி போன்ற பிரச்னைகள் வரும். 'கண்ணுக்கு எளிய பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் இவற்றைத் தடுக்கலாம்’ என்கிறார் அகர்வால் கண் மருத்துவமனையின் டாக்டர் சௌந்தரி. ''உள்ளங்கையால் கண்களை மூடிக்கொண்டு, ஆழ்ந்து மூச்சை இழுத்துவிடுங்கள். இதனால், கண்களுக்கு நல்ல ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்கள் கிடைக்கும். காலை சூரியோதயத்தின்போதும், மாலை சூரிய அஸ்தமனத்தின்போதும் கண்களை மூடிக்கொண்டு சூரிய ஒளி நம் இமை வழியே கண்ணுக்குள் பாயும்படி சில நிமிடங்கள் நில்லுங்கள். இது கண்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். பச்சைப் பசேல் என இருக்கும் செடி, கொடி, இயற்கைக் காட்சிகளைப் பார்ப்பதன் மூலம் கண்கள் குளிர்ச்சியடையும். இமை கொட்டாமல் பார்ப்பதைத் தவிர்த்து, அவ்வப்போது கண் சிமிட்டுவது நல்லது!'' 
    4.மூட்டு
    வயதுக்கு மீறிய கடின உடற்பயிற்சிகளால் மூட்டுகள் பாதிக்கப்படும். இதனால், மிக விரைவிலேயே மூட்டுப் பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளது. கீல்வாதம் (Osteoarthritis) வராமல் தடுக்கும் ஆற்றல் பச்சைக் காய்கறிகளுக்கு உண்டு என்பதால்,  உணவில் பச்சைக் காய்கறி, கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், மூட்டு வலி வராமல் தடுக்கும் என்சைம்கள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் ஆகியவற்றில் அதிகம் உள்ளன.
    5. தோல்
    தோலை இளமையாக வைத்திருக்க அப்போலோ மருத்துவமனையின் சரும நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரியா கூறும் அட்வைஸ்: ''காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் தோலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வெளியே புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே சன் க்ரீம் போட வேண்டும். அதன் எஸ்.பி.எஃப்.(Sun Protection Factor) அளவு 30-க்கு மேல் இருக்க வேண்டும்.  இதை நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை தொடர்ந்து செய்ய வேண்டும். மேலும், பருத்தி ஆடை, கூலிங் கிளாஸ், குடை, தொப்பி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். வைட்டமின் சி, இ, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், கெரட்டினாய்ட்ஸ் (Carotenoids)  உள்ள பழங்கள், காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது 2.5 முதல்  3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். புகை, மதுப்பழக்கத்தினால் தோல் சீக்கிரத்தில் முதுமைத் தன்மை அடையும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். தொடர் உடற்பயிற்சியால், தோலுக்கு நல்ல ரத்த ஓட்டம் ஏற்பட்டு, போதுமான ஆக்சிஜன் சென்று, தோலை இளமையாக வைத்திருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தால் என்றும் இளமையாக இருக்கலாம்!''
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: வயது கூடுவதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க............! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top