அழகுக் கலையில் செய்யக் கூடாதவை - தமிழர்களின் சிந்தனை களம் அழகுக் கலையில் செய்யக் கூடாதவை - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, January 7, 2012

    அழகுக் கலையில் செய்யக் கூடாதவை

    தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்காதீர்கள். தலையின் இயற்கையான எண்ணெய் பசையை போக்கி விடும். வேலை காரணமாக தினமும் தலைக்குக் குளிக்க நேர்ந்தால், குழந்தைகளுக்கான ஷாம்பூ அல்லது மிதமான ஷாம்பூ பயன்படுத்தவும். எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஜூஸ் எடுத்து, முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள் என்று சில அழகுக் குறிப்புகளில் சொல்லப்படுகிறது. ஆனால், எலுமிச்சம் பழத்தோல் அல்லது ஜூசை முகத்தில் அப்படியே தடவக் கூடாது; தோல் அலர்ஜியாகி விடும். பால் அல்லது பேஸ் பேக்குடன் கலந்து தான் உபயோகிக்க வேண்டும். பரு இருப்பவர்கள் முகத்தை மசாஜ் செய்யக் கூடாது; பரு காய்ந்து விட்டதா என்று கிள்ளிப் பார்க்கவும் கூடாது. எண்ணெய் பசை தோலுள்ளவர்கள், முகத்தை சுத்தப்படுத்த சோப்புக்கு பதில் தயிர் உபயோகிக்க கூடாது. மோர் அல்லது பால், எலுமிச்சை சாறு அல்லது பேஸ் வாஷ் கொண்டே முகத்தை சுத்தப்படுத்த வேண்டும்.

    இவர்கள் முகத்துக்கு உபயோகிக்கும் பவுண்டேஷனை நீண்ட நேரம் பூசிக் கொண்டிருக்கக் கூடாது. பருக்கள் மற்றும் கரும்புள்ளி வந்து விடும். தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்காதீர்கள். தலையின் இயற்கையான எண்ணெய் பசையை போக்கி விடும். வேலை காரணமாக தினமும் தலைக்கு குளிக்க நேர்ந்தால், குழந்தைகளுக்கான ஷாம்பூ அல்லது மிதமான ஷாம்பூ பயன்படுத்தவும். முகத்தின் மீது நேரடியாக ஐஸ் கட்டி வைக்கவே கூடாது. அப்படி செய்தால், மிக மெல்லிய மேல்புறம் பாதிக்கப்படும். ஐஸ் கட்டியை பஞ்சு அல்லது துணிக்குள் வைத்து, முகத்தில் ஒற்றி எடுக்கலாம். அதேபோல், அதிக சூடான வெந்நீரிலும் முகம் கழுவக் கூடாது.

    புருவத்துக்கு மையிடும் ஐ-புரோ பென்சிலை வைத்து கண்ணுக்குள் மையிடக் கூடாது. வறண்ட தோல் கொண்டவர்கள், வெள்ளரி துருவல் அல்லது ஜூசை அப்படியே முகத்தில் பூசக் கூடாது; பேஸ் பேக் எதனுடனாவது கலந்துதான் பூச வேண்டும். இவர்கள், அப்படியே உபயோகிக்காமல் புதினா விழுது, முல்தானி மட்டியுடன் கலந்து உபயோகிக்கலாம். டூவீலரில் செல்லும் போது முடியை அப்படியே பறக்க விடக் கூடாது. அழுக்கு சேர்ந்து முடி கொட்ட ஆரம்பித்து விடும். காட்டன் துணியால் தலையை சுற்றி கட்டிக் கொள்ளலாம்.

    தலைமுடி ஈரமாக இருக்கும் போது வாராதீர்கள்; முடி உடைந்து விடும். முகம் கழுவியபின், டவலால் முகத்தை இழுத்துத் துடைக்காதீர்கள்; ஒற்றி எடுப்பதே உத்தமம். இரவில் உபயோகிக்கும் நைட் கிரீமும், மாய்ச்சுரைசரும் கூட கண்ணைச் சுற்றி பூசக் கூடாது. இந்தப் பகுதியில் எண்ணெய் சுரப்பிகளுக்கான துளைகள் கிடையாது. அதனால், கண்ணைச் சுற்றிலும் உப்பிப் போகும் வாய்ப்பு இருக்கிறது. கொதிக்க, கொதிக்க வெந்நீரில் குளிக்கக் கூடாது. உடலில் அத்தனை வியர்வை துளைகளும் திறந்து கொண்டு விடும். நாள் முழுக்க வியர்வை கொட்டும் அழுக்குகள் சுலபமாக அந்த துவாரங்களில் தங்கி அடைத்துக் கொண்டு விடும். முகத்தில் கரும்புள்ளிகளும் வரும், வெந்நீரில் குளித்தால், கடைசியாக உடல் முழுக்க படும்படி இரண்டு குவளை பச்சைத் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அக்குளில் பவுடர் போடக் கூடாது. முக்கியமான வியர்வை சுரப்பிகள் அங்கே இருக்கின்றன. பவுடர் இந்த வியர்வைத் துளைகளை மூடி விடுவதால், வியர்வை வெளிவர முடியாமல், துர்நாற்றம் வீசும். எண்ணெய் பசை தோலுள்ளவர்கள் ஐஸ்கிரீம், எண்ணெய், நெய் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அழகுக்கு முக்கிய எதிரி மலச்சிக்கல்; இது, தோலின் பொலிவை பாதிக்கும். வாய் நாற்றம் ஏற்படும். தினசரி ஏதாவது ஒரு கீரை, பச்சை காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டும்.
    - ஐடியா அம்புஜம்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: அழகுக் கலையில் செய்யக் கூடாதவை Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top