காற்றில் பரவும் தூசு மற்றும் வளர்ப்பு பிராணிகளின் முடிகளால் ஏற்படும் ஒவ்வாமையில் ஆஸ்துமா நோயாளிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர். ‘இன்கேலர், நெப்லைசர்’ போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
மூச்சுத்திணறல் அதிகரிக்கும் சமயங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டியுள்ளது. இவர்களுக்காக புதிய கருவியை இலண்டன் மருத்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 6 ஐரோப்பிய நாடுகளில் இருந்து 7 வயது முதல் 70 வயது வரையிலான 282 ஆஸ்துமா நோயாளிகளிடம் இந்த கருவியை கொண்டு பரிசோதிக்கப்பட்டது.
இந்த கருவியை ஆஸ்துமா நோயாளிகள் வைத்துக்கொண்டால், அவர்களை சுற்றியுள்ள காற்றை தூய்மையாக்கி அளிக்கிறது. தூங்கும்போதும், பணிபுரியும்போதும் ஆஸ்துமா நோயாளிகளின் சுவாசத்தினுள் தூசி போன்ற ஒவ்வாமை பொருட்கள் நுழையாமல் இந்த கருவி தடுக்கிறது. ஓர் ஆண்டு இந்த கருவியை பயன்படுத்த 4 ஆயிரம் பவுண்ஸ் செலவாகிறது.
0 comments:
Post a Comment