குறட்டையால் குடும்பத்தில் பிரச்சனையா ? - தமிழர்களின் சிந்தனை களம் குறட்டையால் குடும்பத்தில் பிரச்சனையா ? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, January 11, 2012

    குறட்டையால் குடும்பத்தில் பிரச்சனையா ?

    வாழ்க்கையில் குறட்டை விடாதவர்கள்னு யாராவது உண்டோ? ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் ஏன் குழந்தைகள் முதற்கொண்டு எல்லோருமே ஏதாவது ஒரு சந் தர்ப்பத்தில் குறட்டை விடுவது வழக்கம்தான். தூங்கும்போது அயற்சியிலும், கடுமையான உடல் உழைப்பிற்குப் பின் உண்டான அசதியாலும் குறட்டை விடுவதென்பது மிகச் சாதாரண இயல்பான செயல். ஆனால் அதுவும் ஒரு எல்லைக்குட்பட்ட வரையில் மட்டுமே. தொடர்ந்து முழு இரவும் தினசரி ஒருவர் குறட்டை விடுவது வழக்கமென்றால் அது இயல்பான செயல் அல்ல. இடைவிடாது தூக்கத்தில் தொடர்ந்த குறட்டை ஒலி என்பது சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டுமல்ல, அவரைச் சார்ந் தவர்களுக்கும் மிகப்பெரிய தொல்லை. இதை அப்படியே விட்டுவிடக் கூடாது. தகுந்த மருத்துவரை நாடி சரியான சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். இப்படிப்பட் டவர்களுக்கு உடல் நலப் பிரச்னைகளோடு உளவியல் ரீதியான பிரச்னைகளும் இருக்கலாம். இந்த இதழில் ‘குறட்டை ஒலி' மற்றும் அதை தவிர்ப்பதற்கான விரிவான காரணங்களைக் காண்போம். 

    குறட்டை ஒலி என்பது உலகிலுள்ள கோடிக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் அச்சுறுத்தக்கூடிய, சகிக்க முடியாத பெரும் பிரச்னையாகக் கருதப்படுகிறது. குறட் டை ஒலியானது, உலகிலுள்ள சுமார் 90 மில்லியன் ஆண்களின் உடல் நலத்தை மட்டுமல்லாமல் அவர்களுடைய மனைவிமார்கள், குழந்தைகள் மற்றும் அவர்களைச்  சார்ந்து வாழும் மற்றவர்களின் உறக்கத்தையும் மன அமைதியையும் கெடுக்கிறது. இந்த குறட்டை ஒலி பிரச்னை இன்று மொழி, இனம், ஏழை, பணக்காரன் என்ற  வேறுபாடுகள் இல்லாமல் எல்லோரும் வெறுக்கக் கூடிய பொதுவான பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.

    குறட்டை ஒலி எவ்வாறு தோன்றுகிறது?
    குறட்டை ஒலியானது, மூக்கு, நாக்கு, மேல் அண்ணம் என்ற மூன்று வகையான உறுப்புகளின் கூட்டணியால், செயல்திறனால் உருவாகின்றது. குறட்டை ஒலியானது  தோன்ற முதல் காரணம் தொண்டைப் பகுதியிலுள்ள மென்மையான திசுக்களானது பல்வகையான காரணங்களால் பாதிக்கப்படுவதால், மூச்சுக் குழலின் விட்டமானது அ ளவில் சுருங்குகிறது. இதனால் குழலின் வழியாக மூச்சுக் காற்று செல்லும்பொழுது தொண்டையின் மேல் அண்ணத்திலுள்ள தசைகள் அதிர்வதால் குறட்டை ஒலி ஏற்படு கின்றது. மேலும் மூச்சு விடும்பொழுது நாக்கானது தன்னுடைய இடத்தை விட்டு பின் பக்கமாகத் தள்ளப்படுவதால் மூச்சுக் காற்று மென்மையாக தடை இல்லாமல் வர  இயலாததால் ஒரு வகையான அதிர்வை ஏற்படுத்துகின்றன. இத்தகைய மாறுபட்ட ஒலியைத்தான் நாம் குறட்டை ஒலி (SNORING) என்கின்றோம். எனவே, தொண்டைப் பகுதியில் பல்வகையான காரணங்களால மூச்சுக் குழலில் காற்றானது எளிதாகச் செல்லாமல், தடைபடும் பொழுது  குறட்டை ஒலி ஏற்பட அடிப்படைக் காரணமாகும்.

    பெண்களைவிட ஆண்கள் அதிக அளவு குறட்டைக்கு ஆளாகக் காரணம் என்ன?
    பெண்களை விட ஆண்கள் பத்து மடங்கு அதிகமாக குறட்டைக்கு ஆளாகின்றார்கள். இதற்கான அடிப்படைக் காரணங்களை கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம் :

    ஆண்களின் தொண்டைப் பகுதியில் அளவிற்கு அதிகமாக திசுக்கள் மிகவும் தடிப்பாக உருவாவதால், இவர்களின் தொண்டைப் பகுதி அளவிற்கு அதிகமாக இருப்பதோடு  அல்லாமல் மேலும் தொண்டைப் பகுதியிலுள்ள மென்மையான திசுக்கள் உருவாவதால், முதுமையின் பொழுது இத்தகைய திசுக்கள் தளர்வுற்று குறட்டையை எழுப்புகின் றன.

    ஆண் இன ஹார்மோனான ஆன்ட்ரோஜன் (Androgen)  ஆணின் உடலில் அளவிற்கு அதிகமாக சுரப்பதால் ஆண்மைக்கு 
    உரிய அறிகுறிகளான தோள் பகு திகள், கழுத்துப் பகுதிகள், வயிற்றுப் பகுதிகளில் அளவிற்கு அதிகமாக கொழுப்பு படிவதால் குறட்டையை ஏற்படுத்தக்கூடும்.

    ஆண் ஹார்மோன் அளவிற்கு அதிகமாக சுரப்பதால் அளவிற்கு அதிகமாக பசி உணர்வைத் தூண்டி உடல் பெருக்கத்தோடு (Obesity)  உடலில் அதிக அளவு  நீர்ப் பெருக்கம் ஏற்படுவதால் இத்தகைய நிலைகள் குறட்டை ஒலிக்கு வழி வகுக்கின்றது!

    குறட்டை ஒலி ஏற்பட அடிப்படைக் காரணங்கள் என்ன?
    பொதுவாக தொண்டைப் பகுதியில் மூச்சுக் குழாய்க்கு வெளியிலிருந்து வரும் காற்று அல்லது உள்ளிருந்து வரும் காற்றின் இயக்கம் போன்ற காரணங்களால் முழுமையாக  அல்லது பகுதியாக தடை ஏற்பட்டு குறட்டையை ஏற்படுத்தக் கூடும். மூச்சு தடைபடுவதற்கான அடிப்படைக் காரணங்கள் எவை என்பதை இங்கு சுருக்கமாகக் காணுவோம்.

    நாசி தொடர்புடைய நோய்களால் அவதியுறும் பொழுது...
    நாசி தொடர்புடைய சில வாசனை திரவியங்கள் குறட்டை ஒலிக்கு வழி வகுக்கும். பல் வகையான ஒவ்வாமையின் காரணமாக, ஏற்படும் நாசி அடைப்பு குறட்டை ஒலியை  தற்காலிகமாக ஏற்படுத்தக் கூடும். நாசியில் ஏற்படும் மென்மையான கட்டிகள் மற்றும் நாசிப் பகுதியிலுள்ள சைனஸ்களில் ஏற்படும் பல்வகையான தொற்றுகள் மற்றும்  ஜலதோஷம், இன்புளுயன்சா போன்ற வைரஸ்களால் ஏற்படும் நாசி வீக்கம், நாசியை இரண்டாகப் பிரிக்கும் நடுச்சுவர் இயற்கையாக நேராக இல்லாமல், கோணலாக இ ருந்தால், மூச்சுக் காற்று தடைபெற்று குறட்டை ஒலி ஏற்படக் கூடும்.

    தொண்டைப் பகுதியானது பல்வகையான நோய்களினால் பாதிக்கப்படும் பொழுது
    தொண்டைப் பகுதியில்  நலமான அளவில் பல்வகை நோய் இயல் மாற்றங்கள் ஏற்பட்டால், குறட்டை ஒலிக்கு வழி வகுக்கக்கூடும். தொண்டைப் பகுதியில் ஏற்படும்  முக்கியமான மாற்றங்களான தொண்டைப் பகுதியிலுள்ள டான்சில்கள் அளவிற்கு அதிகமாக பல்வகையான தொற்றுகள் காரணமாக, வீக்கம் அடைதல், நாவானது பல் வகையான நோய்களின் காரணமாக அளவிற்கு அதிகமாக வீங்குதல் மற்றும் மேல் அண்ணத்தைச் சுற்றியுள்ள மடிப்புகள் அளவிற்கு அதிகமாக வீங்குவதாலும், குறட் டையை ஏற்படுத்தக் கூடும்.

    மற்ற பருவங்களைவிட முதுமைப் பருவத்தில் தொண்டைப் பகுதியிலுள்ள தசைகள் தங்கள் வலுவை இழந்து தளர்ச்சியுறுவதால் குறட்டை ஒலியை ஏற்படுத்தக்கூடும்.

    ஆண்களின் தொண்டையானது பெண்களின் தொண்டையைவிட மிகவும்  குறுகலாக இருப்பதால் ஆண்கள் அதிக அளவு குறட்டைக்கு ஆளாகிறார்கள்.

    ஆஸ்துமா போன்ற ஒவ்வாமை தொடர்புடைய நோய்களுக்கு ஆளானவர்கள் மற்றவர்களைவிட மிக எளிதாக குறட்டைக்கு ஆளாகக்கூடும்.

    மரபு வழிக் காரணிகளும் பெற்றோர்களிடமிருந்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவற்றின் மூலமாகவே பிறவியில் தொண்டையின்  அளவு குறுகலாக இருத்தல், மூக்கிலுள்ள சதைகள் அளவிற்கு அதிகமாக இயற்கையாக இருத்தல் முதலியனவாகும்.

    போதுமான உடற்பயிற்சிகள் இல்லாது போனால், தசைகள் வலுவு இழப்பதால் குறட்டை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களின் மூக்கில் அடைப்பு ஏற்படுவதால் குறட்டை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் புகை மண்டலச் சூழலுக்கு தொடர்ந்து  ஆளாகி வருபவர்களுக்கு குறட்டை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

    தொடர்ந்து  மதுப் பழக்கம் உள்ளவர்களின் தொண்டைப் பகுதியிலுள்ள தசைகள் தங்கள் நலமான நிலையை இழந்து தளர்வு அடைவதால் இவர்கள் மிகவும் எளிதாக குறட்டைக்கு ஆளாகின்றார்கள்.

    உறங்கும்பொழுது சிலவகையான நிலைகள் அதாவது மல்லாந்து படுக்கும் பொழுது தொண்டைப் பகுதியிலுள்ள தசைகள் தளர்வு அடைவதால், மூச்சு பாட்டையில்  எளிதாகக் காற்று செல்வது தடைபடுவதால் குறட்டை ஒலியை ஏற்படுத்தக் கூடும்.

    குறட்டையானது குறட்டைக்கு ஆளாகும் மனிதனின் உடல் நலத்தை எவ்வாறு சிதைக்கின்றது?
    பெரும்பான்மையான மக்கள், குறட்டை விடுபவர்கள் நிம்மதியான உறக்கத்தில் ஈடுபடுகிறார் என்ற தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் குறட்டை விடுபவர்கள்  தாங்கள் உறங்கும் நேரத்தின் பொழுதும் அதைத் தொடர்ந்தும் பல்வகையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகின்றார்கள். குறட்டை விடுபவர்களின் உடல் நலம் எவ்வாறு  பாதிக்கப்படுகிறது என்பதை சுருக்கமாகக் காண்போம்.

    ஒரு மனிதன் குறட்டை விடும் பொழுது குறட்டையின் காரணமாக இரவில் அவனுடைய மூச்சு விடும் திறன் அடிக்கடி பாதிக்கப்படுவதால், மனிதனுக்கு தேவையான  சூழ்நிலை உறக்க நிலையை அவரால் எட்ட இயலாமல் போகிறது.

    தொண்டைப் பகுதியிலுள்ள மேல் அண்ணப் பகுதியாவது குறட்டை ஒலியினால் அதிர்வதாலும் தொண்டையிலுள்ள மூச்சுக் குழாயில் செல்லும் காற்றின் அளவு தடைபடு வதால் தேவையான மூச்சுக் காற்று
     கிடைக்காமல் குறட்டை விடுபவர் மூச்சு விட திணறுகிறார்.

    மூச்சு தடைபடுவதால் இரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவானது மிகவும் குறைகின்றது. இந்த தற்காலிக இழப்பை ஈடுகட்ட இதயம் அளவிற்கு அதிகமாக வேலை செய்கி ன்றது. இதயத்தின் வேலை பளு அதிகமாவதால் இதயத்தின் செயல்பாட்டில் பல்வகையான நோய் இயல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.

    நீண்ட நாட்கள் தொடர்ந்து குறட்டை விடுபவர்களுக்கு உறக்கத்தின் பொழுது சில விநாடிகள் தற்காலிகமாக மூச்சு விடும் நிலை நின்று விடும். இது ஒரு வகையான  தற்காலிகமான நிலையென்றாலும் இத்தகைய நிலையானது, உறக்கத்தில் தொடர்ந்து ஏற்பட்டால் பல்வகையான சிக்கல்கள் ஏற்படக் கூடும். இவ்வாறு உறக்கத்தில்  தற்காலிகமான மூச்சு நிற்கும் நிலையை மருத்துவர்கள் ஆங்கிலத்தில் ‘சீலிப் அப்னியா' என்று கூறுவதுண்டு.  அப்னியா என்ற கிரேக்கச் சொல்லுக்கு மூச்சற்ற நிலை என்று பொருளாகும். இத்தகைய நிகழ்வு உறக்கத்தில் ஏற்படுவதால் இதை ‘‘உறக்கத்தில் நிகழும் மூச்சற்ற நிலை" என சுருக்கமாகக் கூறலாம்.

    உறக்க நிலையின் பொழுது மூச்சுக் காற்றின் இயக்கமானது முழுமையாக தடைபடும்பொழுது இரத்தத்திலுள்ள உயிர்வளியின் அளவு குறையும் பொழுது, இரத்தத்திலுள்ள  கார்பன்டை ஆக்ஸைடு அதிகமாகும்பொழுது இரத்தமானது போதுமான அளவு உயிர்வளி அற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றது. இந்த நிலையை உறக்கத்தில் ஏற்படும்  தற்காலிக மூச்சற்ற நிலை என்று கூறுவதுண்டு. இத்தகைய தற்காலிகமான மூச்சற்ற நிலையானது சில வினாடிகள் முதல் நிமிடம் வரை நீடிக்கும். இந்த தற்காலிக நிலையில்  இவர் எவ்வகையான சலனமும் இல்லாமல் மரக்கட்டை போல் கிடப்பார். சுவாசிக்க முயற்சி செய்து  விழிக்கும்போது காற்றுப் பாதைகள் இத்தகைய நிலையிலிருந்து  மீள்வதற்காக மறுபடியும் மீண்டும் திறந்தவுடன் பயங்கர குறட்டை ஒலியுடன் மூச்சுத் திணறல் நின்றுவிடும். இத்தகைய நிலையானது ஒரு மனிதன் உறங்கும் மொத்த நேர த்தில் நூற்றுக் கணக்கான தடவை ஏற்படக் கூடும். அதாவது உறக்கநிலையில் இருக்கும் பொழுது உங்களை மற்றவர்கள் ஒரு மணி நேரத்தில் 20 முதல் 30 முறை   உங்களை எழுப்புவதற்கு ஒப்பாகும். ஆனால் இத்தகைய நிலையை உறங்குபவர் அறிந்து கொள்ள இயலாது. இதன் விளைவாக, மனிதனுக்கு நிம்மதியான உறக்கம்  தொடர்ந்து இருக்காது.

    அண்மையில் இது தொடர்பான கனடா நாட்டு மருத்துவ ஆய்வானது உறக்கத்தில் ஏற்படும் இத்தகைய தற்காலிக மூச்சற்ற நிலையை உரிய மருத்துவ முறைகளின்  மூலமாக சரி செய்யாவிட்டால் கீழ்க்கண்ட மருத்துவ சிக்கல்கள் ஏற்படக் கூடுமென எச்சரிக்கை செய்கின்றது.

    உரிய மருத்துவ முறைகளின் மூலமாக, இத்தகைய நிலையை உரிய காலத்தில் நலப்படுத்தாவிட்டால், இவர்கள் மிகவும் எளிதாக ஒரு செயலில் ஒருமுகப்படுத்தும் தன் மையை இழப்பதோடு அல்லாமல் நினைவாற்றல் தொடர்புடைய பல்வகையான சிக்கல்களுக்கு ஆளாகக் கூடும். மேலும் இவர்கள் மனச் சோர்வு, உடல் பெருக்கம் போன்ற  நோய்களுக்கு ஆளாகக்கூடும்.

    மேலும் இவர்கள் இதயத்  தொடர்புடைய நோய்களான மாரடைப்பு, இரத்த அழுத்த நோய், மூளைத் தாக்கம் போன்ற நோய்களுக்கு மிகவும் எளிதாக ஆளாகக்கூடும்.

    போதுமான அளவு, உறக்கம் இல்லாத காரணங்களால் இவர்கள் வாகனங்கள் ஓட்டினால் மிகவும் எளிதாக மற்றவர்களைவிட இவர்கள் வாகன விபத்துக்களுக்கு ஆளாகக்  கூடும்.

    குறட்டை விடுபவர்களின் மனைவியின் உடல்நலமானது எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
    குடும்பத்திலுள்ள மற்றவர்களைவிட குறட்டை விடுபவரின் மனைவிதான் கணவனின் குறட்டையால் மிகவும் பாதிக்கப்படுவது வழக்கமாகும். அந்த பாதிப்புக்கள் என்ன எ ன்பதை சுருக்கமாகக் காண்போம்.

    உறக்கத்தில் குறட்டை விடுபவர் பொதுவாக, 60 முதல் 70 டெசிபல் ஒலியை குறட்டையின்போது  எழுப்புகின்றார். இந்த ஒலி ஒரு வாக்குவம் கிளீனிங் மெஷின் எழுப்பும்  ஒலிக்கு இணையானது. இரவு முழுவதும் மனைவி இந்த ஒலியைத் தொடர்ந்து கேட்பது மனைவியின் உறக்கத்தைக் கெடுக்கும்.

    சில சமங்களில் குறட்டை ஒலியின் அளவானது 80 முதல் 100 டெசிபல் வரை அதிகரிக்கக்கூடும். இத்தகைய டெசிப
    ல் குறட்டை ஒலியை ஒரு பெரிய  தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் ஒலிக்கு ஒப்பிடலாம்.

    பல்வகையான ஆய்வு முடிவுகள், இரவு பகலாக குறட்டை ஒலியை எழுப்புபவரின் மனைவி பலவகையான மன உளைச்சலுக்கு ஆளாவதோடு அல்லாமல், காலப்  போக்கில் இரத்த  அழுத்த நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு மற்றவர்களைவிட மிகவும் அதிகமாக உள்ளதெனக் கூறுகிறது.

    மனைவியின் உறக்கம் தடைபடுவதால், மறுநாள் காலை மனைவி தன்னுடைய வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய இயலாது அல்லல்பட  நேர்கிறது.

    இதனால் அன்றாடம் மனைவி உறங்கும் மொத்த நேரத்தில் 1 முதல் 2 மணி நேரம் குறைகிறது என்கிறார்கள் இது பற்றிய ஆய்வாளர்கள்.

    குறட்டை ஒலியை கட்டுப்படுத்த நீங்கள் மேற்கொள்ள வேண்டிய எளிய வழிமுறைகள் :

    நீங்கள் தொடர்ந்து அடிக்கடி இரவு முழுவதும் குறட்டை விடுபவர் என்றால் கீழ்க்கண்ட எளிய வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம் :

    உங்கள் எடையானது அளவிற்கு அதிகமாக இருந்தால், நீங்கள் உடல் பருமனுக்கு ஆளாகியிருந்தால், உங்கள் எடையைக் குறைத்தால், குறட்டை ஒலியின் தன்மை  குறையும். உங்கள் எடையில் 10 விழுக்காடு குறைந்தால் கூட குறட்டை குறையும்.

    நீங்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர் என்றால் மது அருந்துவதை முழுமையாக விலக்குங்கள். அப்படி முடியாவிட்டால் குறைந்தது உறங்குவதற்கு மூன்று மணி  நேரத்திற்குள் மது அருந்துவதை நிறுத்துங்கள்.

    உறங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் தூக்க மாத்திரைகள், போதை மாத்திரைகள் மற்றும் அலர்ஜிக்கு பயன்படுத்தும் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் பயன்படுத்து வதைத் தவிர்த்து விடுங்கள்.

    நீங்கள் புகைபிடிக்கும் பழக்கம் உடையவர் எனில் அந்தப் பழக்கத்தைத் துறப்பது சிறந்தது.

    இரவு நேரத்தில் அதிக அளவு வயிறு புடைக்க கொழுப்பு வகை உணவுகள் உட்கொள்வதை முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.

    உங்கள் படுக்கையின் தலைப்பகுதிக்குக் கீழ் தடித்த கனமான புத்தகங்களை அடுக்கி, தலைப்பகுதியை சற்று உயர்த்துங்கள். ஆனால் ஒரு பொழுதும் பெரிய  தலையணையை வைக்காதீர்கள். இது உங்கள் கழுத்துப் பகுதியை வளைக்கக் கூடும்.

    ஒருபோதும் மல்லாந்து படுக்காதீர்கள். இப்படிப் படுத்தால் நாக்கு பின் பக்கமாகத் தள்ளி, மூச்சுக் குழாயில் காற்று செல்லாது தடையுற்று எளிதாக குறட்டைகளாக்கும்.  ஆகவே உறங்கும்பொழுது ஒரு பக்கமாக சரிந்து இருப்பது குறட்டையை ஓரளவு தடுக்க முடியும்.

    குறட்டைக்கு ஆளாகியவர்கள் எவ்வகையான நிலையில் மருத்துவரின் உதவியை நாடவேண்டும்?

    குறட்டை விடுபவர்கள் கீழ்க்கண்ட அறிகுறிகளுக்கு ஆளானால் அவர்கள் உடனடியாக மருத்துவரின் உதவியை நாடுவது சிறந்த தற்காப்பு முறையாகும் :

    நீங்கள் அடிக்கடி அதிக ஒலியுடன் குறட்டை விடுபவரா?

    மறுநாள் காலையில் எழுந்திருக்கும்பொழுது அதிக களைப்புடன் காணப்
    படுகின்றீர்களா?

    பகல் நேரங்களில் அடிக்கடி உறக்கக் கலக்கத்துடன் காணப்படுகின்றீர்களா?

    உங்களுடைய உடலானது அளவிற்கு அதிகமாக பருமனாக இருக்கின்றதா அல்லது உங்கள் கழுத்துப் பகுதி அதிக அளவு பருத்து சதை அதிகமாக உள்ளதா?

    குறட்டையை சமாளிக்க எவ்வகையான கருவிகள் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
    குறட்டையை முழுமையாக நலப்படுத்தக்கூடிய கருவிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தாலும், குறட்டையின் தன்மையை ஓரளவு குறைக்கும் தன்மையுள்ள  சில வகையான கருவிகள் தற்பொழுது உள்ளன. அவை எவ்வாறு குறட்டையைத் தடுக்கின்றன என்பதை இங்கு சுருக்கமாகக் காண்போம்.

    சீ பாப் கருவி
    சீ பாப் என்பது தொடர் நலமான காற்றுவழி அழுத்தம் (Contineous positive Airway Pressure) என்பதன் சுருக்கம்தான். இதை  ஆங்கிலத்தில் சுருக்கமாக சீ பாப் என்று கூறுவதுண்டு. இந்தக் கருவியின் முக்கிய நோக்கம் குறட்டையின் பொழுது ஏற்படும் மூச்சுத் திணறலை தற்காலிகமாகத் தடு ப்பதாம்.

    அல்ட்ரா ஹார்ட் அண்ட் சவுண்ட் சூத்தர் (Ultra Heart and Sound Soother) 
    இந்தக் கருவியானது குறட்டை ஒலியைத் தடுக்காவிட்டாலும் குறட்டை ஒலியின் அளவை குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது.

    முறையான சுவாசம் (Breath Right)
    குறட்டை ஒலிக்கு அடிப்படைக் காரணம் மூக்காக இருந்தால் இத்தகைய எளிமையான அமைப்பானது குறட்டை ஒலியின் தன்மையைக் குறைக்க உதவும். மெல்லிய சி ன்னச் சின்னத் தகடுகளைப் பயன்படுத்தி மூக்கின் துவாரங்களை தற்காலிகமாக விரித்து காற்றோட்டத்தை தடையில்லாமல் வழங்குவது இதன் நோக்கமாகும்.

    காற்றை தூய்மைப்படுத்தும் கருவி (Air Purifier)
     ஒவ்வாமையின் காரணமாக சிலருக்கு குறட்டை ஏற்படக் கூடும். இந்த நோயாளிகளுக்கு மின் ஆற்றலில் இயங்கும் இந்தக் கருவி பயன்படக் கூடும். இந்தக் கருவியிலு ள்ள வடிப்பான் (filter) குறட்டை விடுபவர் உறங்கும் அறையின் காற்றிலுள்ள ஒவ்வாமை நுண்துகள்கள், மகரந்தம், முடிகள், காளான்கள் இவற்றை வடிகட்டி,  காற்றை தூய்மைப்படுத்தும்.

    ஸ்னோரிங் அலார்ம் (Snoring Alarms)  
    இந்த சிறு கருவியை குறட்டை விடுபவர் கைக்கடிகாரம்போல் கையில் கட்டிக் கொள்ளலாம். ஒலியால் இயக்கப்பட்டு ஒலியைக் கண்டுபிடித்து இந்தக் கருவியானது,  மற்றொரு ஒலியை எழுப்பி எச்சரிக்கை செய்யும். ஆனால் இக்கருவி எவ்வளவு குறட்டையைக் குறைக்க முடியும் என்பது கேள்விக்குறி.

    குறட்டை ஒலிக்கு மருத்துவம் என்பது கேள்விக்குறியே?
    குறட்டை ஒலியை முழுமையாக குணப்படுத்த எவ்வகையான முழுமையான மருத்துவ முறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அண்மையில் மேலை நாட்டிலுள்ள  புகழ்பெற்ற இதழ் ஒன்றுக்கு கணவனின் குறட்டை ஒலியால் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட மனைவி எழுதிய கடிதத்தில் ‘‘என்னுடைய கணவனின் 27 ஆண்
    டு கால குறட் டைக்கு சிறந்த மருந்தைத் தேடி அலைந்து ஏமாற்றத்தை அடைந்ததுதான் மிச்சம். என்னுடைய தூக்கம் கெட்டதுதான் மிச்சம். இப்படிப்பட்ட கணவனை மணந்து 27 ஆ ண்டு காலமாக தொல்லையுறும் எனக்கு குறட்டையினின்று நிரந்தரமாக விடுபட, கணவனைக் கொல்லுவதுதான் சிறந்த வழி. ஆனால், அது சட்டப்படி குற்றம் என்பதால்  இதை செய்ய அஞ்சுகிறேன்" என்கிறார்.

    புகழ்பெற்ற பிரிட்டன் நாட்டு ஆங்கில நாவலாசிரியர் குறட்டையைப் பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்.

    ‘Lough And The World Laughs with you, Snore and you sleep Alone’

    குறட்டைப்பற்றிய சுவையான உண்மைகள்!
    மக்களில் 30 முதல் 50 விழுக்காட்டினர் தங்கள் வாழ்க்கையில் எப்பொழுதாவது ஆர்வமாக குறட்டை விடுவது வழக்கம்.

    முதுமைப் பருவத்தில் குறட்டை விடும் தன்மையானது அதிகமாகின்றது.

    குறட்டை ஒலி என்பது உறக்கத்தில் ஏற்படும் பிரச்னை என்றாலும், தொடர்ந்து குறட்டை விடுவது, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படக் காரணமாக  உள்ளது. இந்தியாவைத் தவிர அயல்நாடுகளில் சில சமயங்களில் மண விலக்கிற்கு அடிப்படைக் காரணமே குறட்டை ஒலி பிரச்னை தானாம்.

    75சதம் செக் நாட்டு மனைவியர் தங்கள் கணவன்மார்கள் உறக்கத்தின் பொழுது தங்களால் சகித்துக்கொள்ள முடியாத - தங்கள் உறக்கம் கெடும் அளவில் குறட்டை  விடுகின்றார்கள் என குறை கூறுகின்றார்கள்.

    குறட்டை என்பது முதியவர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களும் அடிக்கடி குறட்டைப் பிரச்னையால்  அவதியுறுகின்றனர்.

    அண்மையில் பிரிட்டன் நாட்டில் நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவில் நாள் தவறாது தொடர்ந்து குறட்டை விடும் கணவனை மணந்துகொண்ட மனைவிமார்கள் தங்கள் திரு மண வாழ்க்கையின் 50 வயது நிறைவு விழாவைக் கொண்டாடும் பொழுது, தங்கள் வாழ்க்கையில் மொத்தம் 4 ஆண்டுகால உறக்கத்தை மொத்தமாக இழந்திருப்பதாகக்  கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

    மக்கள் தொகையில் 25 விழுக்காட்டினர் தொடர்ந்து கடுமையான குறட்டைக்கு ஆளாகிறார்கள்.

    ஜான் வெஸ்லே ஹர்டிஸ் துப்பாக்கி சுடுவதில் வல்லவர். இவர் ஒரு நாள் தங்கும் விடுதி ஒன்றில் இரவில்  தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது பக்கத்து அறையில் ஒரு வரின் தாங்க இயலாத குறட்டை ஒலியை சகிக்க முடியாமல் தன்னுடைய துப்பாக்கியை எடுத்துச் சென்று அவர் உயிர் போகும் அளவிற்கு சுட்டுத் தள்ளினார்.

    குறட்டையைப் பற்றி விரிவான ஆய்வு நிகழ்த்திய மருத்துவ ஆய்வாளர்கள் பெரும்பான்மையான மனிதர்கள் காலை 5 முதல் 6 மணிக்கு உள்ள இடைவெளியில்  இறக்கின்றார்கள். இத்தகைய காலைப் பொழுதை பெரும்பாலும் அமைதியான நேரம் என்று குறிப்பிடுவது வழக்கமாகும். இத்தகைய இறப்பிற்கு முக்கிய காரணங்களில் ஒ ன்று குறட்டையின் பொழுது ஏற்படும் நிரந்தரமான மூச்சு நின்றுவிடுவதுதான் காரணமாகும் என்கிறார்கள்.
    - டாக்டர் அ. பொன்னம்பலம்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: குறட்டையால் குடும்பத்தில் பிரச்சனையா ? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top