காதுக்குள் வினோத சத்தம் கேற்கிறதா ? - தமிழர்களின் சிந்தனை களம் காதுக்குள் வினோத சத்தம் கேற்கிறதா ? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, January 11, 2012

    காதுக்குள் வினோத சத்தம் கேற்கிறதா ?

    காதின் கேட்கும் திறன் இயல்பாக இருக்க, காதினுள் உட்புகும் ஒலியானது நடுக்காதுப் பகுதியில் நுழைந்து பரவி  காது ஜவ்வில் மோத வேண்டும். ஆனால் ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு இருப்பவர்களுக்கு காதின் உள்ளே நு ழையும் ஒலி ஜவ்வில் மோதுவதற்கு முன்பே ஸ்டேப்ஸ் எலும்பு வளர்ச்சியால் தடுக்கப்படுகிறது, இதனால் காதின்  கேட்கும் திறன் பாதிப்படைகிறது.
    ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு குறித்து...
    நமக்கோ அல்லது நம் குழந்தைகளுக்கோ எவரானாலும் சரி, வயது வேறுபாடு இன்றி காதுக்குள் விநோதமான சத் தம் கேட்கத் தொடங்கினால் சில நாட்களில் சரியாகி விடக்கூடும் என்று அதை ஒத்திப் போடுவது அபாயகரமானது.  அப்படி விநோதமான சத்தம் வரக் காரணம் என்ன என்பதை காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவரை  
    அணுகி மருத்துவர் பரிந்துரைக்கும் முழுமையான ஆய்வுகளுக்கு உட்பட்டு விநோத சப்தங்களுக்கான  காரணங்களை உடனே அறிய முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்தில் உரிய மருத்துவ அணுகுமுறை இல்லாமல்  புறக்கணித்துவிட்டு, நாட்கள் பல கடந்தபின் கேட்கும் திறனை முழுமையாக இழக்கும்நிலை வரை காத்திருப்பது பு த்திசாலித்தனம் ஆகாது.

    காதுக்குள் வினோதமான சப்தங்கள் அடிக்கடி கேட்டால் அந்தக் குறைபாட்டை ‘‘ஒடெஸ்லோரோசிஸ்’’ என்று மருத் துவர்கள் கூறுகின்றனர். இந்தக் குறைபாடு வரக் காரணம் நடுக்காதுப் பகுதியில் காணப்படும் சிறு எலும்புகளின் வ ளர்ச்சி, இந்த சிறு எலும்புகளை மருத்துவர்கள் ‘ஸ்டேப்ஸ்’ என்கிறார்கள். இந்த எலும்புகள் சிலருக்கு பரம்பரை  மூலக்கூறுகள் காரணமாக இயல்பான வளர்ச்சியைத் தாண்டி விரைவாக வளர ஆரம்பிக்கின்றனவாம். அப்படி வ ளரும் எலும்புகள் காதுக்குள் உட்புகும் ஒலி நடுக்காதுப் பகுதியில் இந்த எலும்புகளால் தடு
    க்கப்பட்டு காது ஜவ்வில்  பட்டு ஒலிக்கும் திறனை இழக்கிறது; மேலும் இடையில் தடுக்கப்படுவதால் வினோதமான சத்தம் கேட்க  ஆரம்பிக்கிறது.
    இந்த ஸ்டேப்ஸ் எலும்புகளின் வளர்ச்சியை ஆரம்பம் முதலே அறுவை சிகிச்சை முறையில் முற்றிலுமாக கட்டுப்ப டுத்தலாம். ஆனால் அறுவை சிகிச்சை குறித்த பயம் உள்ள நோயாளிகள் வயது வித்தியாசமின்றி அறுவை  சிகிச்சையைப் புறக்கணித்து காது கேட்கும் திறனளிக்கும் மெஷின்களையே பயன்படுத்த விரும்புகின்றனர். ஸ்டேப்ஸ்  எலும்புகள் அபரிமிதமாக வளர்ந்துவிட்டால் இந்த உபகரணங்களால் யாதொரு பயனும் இல்லை. படிப்படியாக காது  கேட்கும் திறனை இழப்பதைவிட ஆரம்ப நிலையிலேயே அறுவை சிகிச்சை என்பதே முற்றாகப் பலனளிக்க வல்லது  என காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இந்தக் குறைபாடு பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளையே அதிகம் தாக்குவதாக  ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேலும் பெண்களுக்கு இத்தகைய குறைபாடுகள் இருக்கும் அறிகுறிகள் பெ ரும்பாலும் கவனிக்கப்படாமல் விடுபட்டாலும் 
    கூட கர்ப்ப காலங்களில் இந்தக் குறைபாடுகள் தனது அறிகுறிகளை  முழுதாகக் காட்டத் தொடங்கி விடுகின்றனவாம், அப்போதைக்கு வலி நிவாரணிகள் மூலம் சமாளித்தாலும் குழந்தை  பிறந்த பின்பு முழு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் காலப்போக்கில் காதுகள் முற்றாக கேட்கும்  திறனை இழக்கும் நிலை வரும்.

    இதற்கான அறுவை சிகிச்சையை ‘ஸ்டேபிடெக்ட்டமி’ என காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர்கள் கூறுகின் றனர். இந்த அறுவை சிகிச்சை காதின் உட்புறத்தில் நடத்தப்படுவதால் வெளிப்புறம் கத்தியால் அறுவை சிகிச்சை  செய்யும்போது ஏற்படும் வடுக்கள் எதுவும் தோன்ற வாய்ப்புகளே இல்லை. மேலும் அறுவை சிகிச்சைக்குப் பின்  முழுமையாக காது கேட்கும் திறனைப் பெறுவதற்கான உத்தரவாதம் உண்டாம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: காதுக்குள் வினோத சத்தம் கேற்கிறதா ? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top