ஞாபக மறதியினால் பிரச்சனையா..? தினம் 3 டம்ளர் காபி குடிங்க… - தமிழர்களின் சிந்தனை களம் ஞாபக மறதியினால் பிரச்சனையா..? தினம் 3 டம்ளர் காபி குடிங்க… - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Friday, June 29, 2012

    ஞாபக மறதியினால் பிரச்சனையா..? தினம் 3 டம்ளர் காபி குடிங்க…

    எழுந்தவுடன் சிலருக்கு காபி குடித்தால் தான் நிம்மதியாக இருக்கும். மேலும் ஒரு கப் காபி குடித்தால்தான் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று அதற்கு காரணம் கூறுவார்கள்.

    அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தினசரி மூன்று கப் காபி குடிப்பதால் அவர்களுக்கு அல்சீமர் எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படுவது தள்ளிப் போகிறதாம்.
    வயதானவர்களை அதிகம் பாதிக்கும் அல்சீமர் நோய் குறித்து தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வுக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தம்பா மற்றும் மியாமி நகரங்களைச் சேர்ந்த 65 வயது முதல் 88 வயதிற்கு மேற்பட்ட 124 மூத்த குடிமக்கள் பங்கேற்றனர்.
    அவர்களுக்கு தினசரி 3 கப் காபி குடிக்கக் கொடுக்கப்பட்டது. இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை படிப்படியாக அவர்களை கண்காணித்தனர். பின்னர் அவர்களை ஆய்வு செய்ததில் அவர்களுக்கு டிமென்சியா நோய் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. மேலும் அல்சீமர் நோய் பாதிப்புகள் ஏற்படும் அறிகுறிகளும் தென்படவில்லை.
    இதற்குக் காரணம் காபியில் உள்ள காபின் எனப்படும் பொருள்தான் என்று கண்டறிந்துள்ளனர். திடீர் ஞாபகமறதி நோயாளிகள், தங்களை அல்சீமரில் இருந்து தற்காத்துக்கொள்ள தினசரி 3 கப் காபி குடிப்பதில் தவறேதும் இல்லைதானே.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: ஞாபக மறதியினால் பிரச்சனையா..? தினம் 3 டம்ளர் காபி குடிங்க… Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top