புதர்ச்செடியாக வளரும் இந்த வகைத் தாவரம் அற்புத மூலிகைகளில் ஒன்றாகும். இலைகள் தடித்து நீளமுட்டை வடிவமானவை. இலை நுனியில் கூர்மையான 4 முட்கள் காணப்படும்.சிறிய பழுப்பு நிற பூக்களும், உருண்டையான சதைப்பற்றுள்ள கனிகளும் காணப்படும்.
ஒவ்வொரு பழத்திலும் 2 விதைகள் இருக்கும். முட்சங்கு, சங்கன்,செடிச்சங்கன், சங்கமுள், ஆகிய மாற்றுப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இலை, வேர் ஆகியவை மருத்துவத்தில் பயன்படுகிறது.
இருமலை போக்கவும், சிறுநீரை பெருக்கவும், காய்ச்சலை குறைக்கவும், முடக்குவாதம், கீல்வாதத்தை குணமாக்கவும் பயன்படுகிறது. இதன் வேர் கண்பார்வையை அதிகரிக்கச் செய்கிறது. ரத்தத்தை விருத்தியாக்குகிறது.
காயம், சொறி, சிரங்கு குணமாக முட்சங்கன் இலைகளை அரைத்து பூசி வர வேண்டும். முட்சங்கன் வேரை 2 கிராம் அளவில் எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து, 4 மிளகுடன் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதை பாலில் கலந்து தினமும் 2 வேளைகள் வீதம் 3 நாட்கள் குடித்து வந்தால், காணாக்கடி மற்றும் பூச்சிக்கடி விஷம் குணமாகும்.
முட்சங்கன் இலை, தூது வேளை இலை ஆகிய இரண்டையும் ஒரு பிடி அளவில் அரைத்து நெல்லிக்காய் அளவில் உருட்டி, ஒரு தம்ளர் பசும் பாலில் கலக்கி குடித்தால் சளி வெளியாகும்.
இலையை அரைத்து அம்மைப் புண்களின் மேல் பூசினால் கொப்புளங்கள் மறையும். வேர்ப்பட்டையை அரைத்து அடிப்பட்ட வீக்கத்தில் பூசி வந்தால் வீக்கம் கரையும்.
0 comments:
Post a Comment