ஹை ஹீல்ஸ் அணிந்தால் கால் வலி வருமா? - தமிழர்களின் சிந்தனை களம் ஹை ஹீல்ஸ் அணிந்தால் கால் வலி வருமா? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, June 2, 2012

    ஹை ஹீல்ஸ் அணிந்தால் கால் வலி வருமா?


    கல்லூரியில் படிக்கும் என் மகள் காலில் பாயின்டட் ஹீல்ஸ் போடுகிறாள். வேண்டாம் என்று சொன்னாலும் கேட்க மாட்டாள். தற்போது, குதிகால் வலியால் மிகவும் அவதிப்படுகிறாள். ஹீல்ஸ் போடுவதால் என்னென்ன பாதிப்புகள் வரும்?''

    டாக்டர் ராஜா,எலும்பு இயல் மற்றும் பாத சிகிச்சை நிபுணர்.
    ''ஹீல்ஸ் போடுவதால், முன்னங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் வலி நிச்சயம் ஏற்படும். ஆடு தசைகள் இறுகும். இதனால், கீழ் இடுப்பு வலியும் முதுகு வலியும் சேர்ந்து நடக்க முடியாமல் முடக்கிப்போட்டுவிடும். அதிலும் பாயின்டட் ஹீல்ஸ் போடுவது மிக அபாயகரமானது.
    இயற்கைக்கு மாறாக, நம் உடல் பாகங்களின் செயல்கள் மாறும்போது, அதில் பிரச்னைகள் வரத்தான் செய்யும். தட்டையாக இருக்கும் ஃப்ளாட் செருப்புகளை மட்டுமே அணிய வேண்டும். ஹீல்ஸினால் ஏற்பட்ட வலியில் இருப்பவர்கள், மருத்துவரை அணுகி, காலுக்கு பொருந்தக் கூடிய ஆர்த்ரெடிஸ் செருப்புகளை அணியலாம். டாக்டர் கொடுக்கும் வலி நிவாரணி மருந்துகளும் பலன் தரும். டாக்டர் பரிந்துரையின்படி மூன்று மாதங்கள் தொடர்ந்து பிஸியோதெரபி சிகிச்சை செய்துகொள்வதன் மூலம் தசைகளைத் தளர்த்தி வலிகளை விரட்டலாம்.''
    தினமும் இரு வேளையும் நன்றாக ஐந்து நிமிடங்கள் பிரஷ் செய்வேன். கடந்த மூன்று மாதங்களாக ஜெல் பேஸ்ட் பயன்படுத்தினேன். திடீரென, பல் ரொம்பக் கூச ஆரம்பித்துவிட்டது. இந்தப் பிரச்னைக்கு ஜெல் பேஸ்ட் காரணமா அல்லது பல்லில் ஏதேனும் கோளாறா?''
    டாக்டர் ஜானகிராமன்,பல் மருத்துவர்.
    ''பல்லின் மேல் உள்ள எனாமல் தேய்ந்துபோனாலோ அல்லது பல் சொத்தையானாலோ ஏற்படும் ஒருவித ஷாக்தான், பல் கூச்சம். பல்லில்தான் கோளாறே தவிர, உபயோகிக்கும் பற்பசையில் இல்லை.
    பொதுவாகப் பல் கூசுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
    1. பல் துலக்கும் முறை தவறானதாக இருக்கலாம். மேல் தாடைப் பற்கள் கீழ் நோக்கி வளர்வதால், மேல் பற்களைக் கீழ் நோக்கியும் கீழ்த் தாடைப் பற்கள் மேல் நோக்கி வளர்வதால் கீழ்ப் பற்களை மேல் நோக்கியும் பிரெஷ் செய்ய வேண்டும். இதில் ஏதாவது மாற்றம் ஏற்படுமாயின் பற்கள் தேய்மானத்திற்கு உள்ளாகும். இதனால் பற்களின் எனாமல் தேய வாய்ப்பு உள்ளது.
    2. பல் அல்லது ஈறில் கோளாறு இருக்கலாம்.
    தொடர்ந்து பல் கூச்சம் இருந்தால், பற்களை எக்ஸ்-ரே எடுக்க வேண்டும். கூச்சம் ஏற்படுவதற்குக் காரணம் பல் தேய்மானமா அல்லது பல் சொத்தையா என்பதை முதலில் கண்டறிய வேண்டும். பல் ஈறு, சதைப் பகுதி பாதிக்கப்பட்டு இருக்கும் என்றால், 'ரூட் கெனால் ட்ரீட்மென்ட்’ என்ற சிகிச்சையைச் செய்ய வேண்டும். இது பல் கூச்சத்திற்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.''
    டெய்சி ராணி,சென்னை.
    என்னுடைய மகளுக்கு வயது 14. அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசும்போது, அவளுக்குப் பேச்சு திக்குகிறது. ஆனால், வீட்டில் எங்களுடன் பேசும்போது திக்குவது இல்லை. அருமையாகப் பாடுவாள். அப்போதும் திக்காது. திக்கிப் பேசுவதால் தாழ்வு மனப்பான்மையும் அவளுக்கு இருக்கிறது. இதற்கு நல்ல வழி சொல்லுங்கள்.''
    டாக்டர் குமரேசன், காது, மூக்கு, தொண்டை நிபுணர்.
    ''பிறந்த குழந்தையில் இருந்து நம் எல்லோருக்குமே பேசுவதில் 20 சதவிகிதம் திக்குவாய் இருக்கத்தான் செய்யும். பழகப் பழகத்தான் திக்குவது நிற்கும். சில குழந்தைகளுக்கு வளர்ந்த பிறகும் திக்குவாய் இருக்கும். சாதாரணமாக, ஒரு மனிதரை நான்கு அடி அடித்தால் பேசும்போது திக்கத்தான் செய்யும். அதன் பிறகு மற்ற நேரங்களில் திக்காது.
    இது நோய் அல்ல. ஆனால், பிரச்னை பெரிதாகும்போது நோயாக பாவிக்கப்படுகிறது. மேலும், வலது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு மூளையின் இடது பக்கமும் இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்குமூளையின் வலது பக்கமும் சுறுசுறுப்பாகச் செயல்படும். இதில் பிரச்னை இருந்தாலும் திக்கலாம். அதாவது குழந்தை பிறவியிலேயே இடது கைப் பழக்கம் இருந்து பெற்றோர் வலுக்கட்டாயமாக வலது கைப் பழக்கத்துக்கு அதை மாற்றி இருந்தால், திக்குவாய்ப் பிரச்னை வரலாம்.
    ஃபங்ஷனல் எம்.ஆர்.ஐ. (Functional MRI) பரிசோதனை மூலம், பேசும்போது எதனால் திக்குகிறது என்பதைக் கண்டறியலாம். இதனால் மூளையில் புரொகாஸ் பகுதியில் பிரச்னை இருக்கிறதா என்பதைத் தெரிந்து, அதைச் சரிசெய்யலாம். இதற்கு மூன்று விதமான பயிற்சிகள் உண்டு. 1. பேசும் பயிற்சி (Functional Speach Theraphy),  பாடும்போது அடிவயிற்றில் இருந்து பாடுவார்கள். ஆனால், பேசும்போது உதட்டில் இருந்து பேசுவார்கள். இதனால் பேச்சு திக்கும். இதற்கு மூச்சுப் பயிற்சி கொடுத்து நுரையீரலுக்கு காற்று செல்ல, வயிறை அசைத்து மூச்சுவிடச் செய்வது. 2. எதிரொலி பேசும் பயிற்சி (Eco Speach Theraphy),  நாம் பேசுவதை நாமே கேட்டு ரசித்துப் பேசும் பயிற்சி. இதனால் தன்னம்பிக்கை பிறக்கும். 3. பன்முக மருத்துவப் பரிமாணம் (Virtual Reality Theraphy). நாம் பேசும்போது நம்மைப் போலவே ஓர் உருவத்தை உருவாக்கிப் பேசுதல்... எதிராளி இருப்பதுபோல்... இதனால் வலதுப் பக்க மூளை நன்றாக வேலை செய்யத் தொடங்கும்.
    இந்த மூன்று சிகிச்சைகளுடன் அடிப்படைப் பயிற்சிகளையும் செய்துவந்தால், திக்குவாய்ப் பிரச்னை திரும்பிக்கூட பார்க்காது. தாழ்வு மனப்பான்மையும் விலகும்.
    ராஜேஸ்வரி, தஞ்சாவூர்.
    ''என் இளம் வயதில் கண் இமைகளில் அதிக முடி இருக்கும். ஆனால், 40 வயதைக் கடந்துவிட்ட தற்போதைய நிலையில் முகத்தைக் கழுவும்போதெல்லாம் கண் இமை முடிகள் உதிர்கின்றன. கண்கள் சோர்ந்து, நீர் வடியத் தொடங்கிவிடுகிறது. இமை முடிகள் உதிர்வதற்கு என்ன காரணம்?'
      டாக்டர் அருள்மொழி வர்மன், கண் சிகிச்சை நிபுணர்.
    '' 'கண்ணை இமை காப்பதுபோல்’ என்று சொல்வது உண்டு. கண்களுக்குள் தூசி விழாமல், நீர் போகாமல் கண்களைப் பாதுகாப்பதில் இமைகளுக்கு பெரும் பங்கு உண்டு. சிறு வயதில் கண் இமைகளில் தோன்றும் முடிதான் பெரியவர்கள் ஆகும் வரை இருக்கும். வயது ஏற ஏற அதன் விரைப்புத்தன்மை குறையுமே தவிர, முடி கொட்டாது. அதிக நேரம் அழுதுகொண்டு, கண்களைக் கசக்குவதால் கண் முடி உதிர்கிறது என்று பலரும் கருதுகின்றனர். இதுவும் தவறான கருத்து. இமைப் பகுதியில் உண்டாகும் நோய்த்தொற்றின் காரணத்தால் மட்டுமே, இமை முடி உதிரும். கண் இமைகளில் முடி உதிர்வதற்கு 'பிளிபரிடிஸ்’ (Blepharitis)  என்னும் ஒரு வகைத் தொற்றுதான் முக்கியமான காரணம். இமைப் பகுதியில் தூசு, ரசாயனம் மற்றும் அமிலம் போன்றவை பட்டாலும் இமையின் உட்புறம் பாதிப்புக்குள்ளாகி, இமை முடிகள் வளராத நிலையை உண்டாக்கிவிடும்.
    கண்களைச் சரியாகப் பராமரிக்காமல் விட்டுவிட்டால், இந்தத் தொற்று இமைகளைத் தாக்கி, கண்களில் பொரி போன்று தோன்றும். அழுக்கு உருவாகி அரிப்பை ஏற்படுத்தும். கண்களில் உறுத்தல் இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட ஆரம்பித்ததும், இமையில் உள்ள முடிகள் உதிரத் தொடங்கும். இமைகளில் முடி உதிர்வதால், கண்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடலாம். இமைகளில் தொற்று ஏற்பட்டால், ஆன்டிபயாடிக் ஆயின்மென்ட் தடவி கண்களை லேசாக மசாஜ் செய்யலாம். இப்படி 20 நாட்கள் செய்து வந்தால், இமை உதிர்வது தவிர்க்கப்படும். அதிக வைட்டமின் சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமும் இமை முடிகள் உதிர்வதைத் தவிர்க்க முடியும். கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுப்பதும் அவசியம்.
    கண்களைச் சுத்தமான குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவி எந்தத் தொற்றும் வராமல் பாதுகாத்தாலே, இமைகளில் முடி உதிராமல் பாதுகாக்க முடியும். உதிரும் அறிகுறிகள் தென்பட்ட உடன் கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: ஹை ஹீல்ஸ் அணிந்தால் கால் வலி வருமா? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top