டெங்கு காய்ச்சலை கண்டுபிடிப்பது... மற்றும் தடுப்பது எப்படி? - தமிழர்களின் சிந்தனை களம் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிப்பது... மற்றும் தடுப்பது எப்படி? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Monday, June 3, 2013

    டெங்கு காய்ச்சலை கண்டுபிடிப்பது... மற்றும் தடுப்பது எப்படி?

     
    டெங்கு காய்ச்சலை கண்டுபிடிப்பது... மற்றும் தடுப்பது எப்படி?

    மற்ற பல காய்ச்சல்களைப்போல இருப்பதால் ஆரம்பத்தில் டெங்கு காய்ச்சலைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. சில ஸ்பெஷல் இரத்த சோதனை (1gm elisa மற்றும் RT- PCR) செய்வதன் மூலமே கண்டுபிடிக்கமுடியும். ஆனால் இந்த சோதனை மாவட்ட மருத்துவமனைகளில் மட்டுமல்ல பல மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூட இருப்பதில்லை. மேலும் ஆரம்ப நாட்களில் இந்த சோதனையில் டெங்கு இல்லையென்று வரக்கூடும். பல நாட்களுக்குப் பிறகே இரத்த சோதனைமூலம் டெங்கு இருப்பது தெரியக்கூடும்.

    மற்ற பல வைரஸ்களைப்போலவே டெங்கு காய்ச்சல் உண்டாக்கும் வைரஸ்களைக் கொல்லும் மருந்துகள் இல்லை. அறிகுறிகளுக்குத்தான் சிகிச்சை தரவேண்டும். மிதமான காய்ச்சலானால் வீட்டில் வைத்தே சிகிச்சையளிக்கலாம். படுக்கையில் ஓய்வு, திரவ உணவுகள், காய்ச்சலுக்கு பேராசிட்டமால் போன்ற முறைகளில் பெரும்பாலான நோயாளிகள் குணமடையலாம். நோய் மோசாகும்போது, மிகுந்த அசதி, படபடப்பு, கை கால் குளிர்தல் ஆகியவை ஏற்படுமானால், நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க வேண்டும். நரம்பூசி மூலம் நீரேற்ற வேண்டும். ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் பொதுவாக பலனளிப்பதில்லை என்றாலும், சில சமயங்களில் தேவைப்படலாம். மிகவும் தீவிரமாக நோயிருந்தால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து புதிய உறைந்த பிளாஸ்மா, ( Fresh Frozen Plasma(FFP) தட்டணுக்கள், இரத்தச் சிவப்பணுத் தொகுதி ஆகியவை மிகுந்த அளவில் தேவைப்படலாம். ஒரு சில நோயாளிகளுக்கு தீவிரமான சிக்கல்கள் ஏற்பட்டு மரணமடையக்கூடும்.

    டெங்கு காய்ச்சல் உண்டாக்கும் வைரஸ்கள் நான்கு வகை உள்ளன. எனவே ஒரு வகை காய்ச்சல் பாதித்த நோயாளிக்கு அதே வகை காய்ச்சல் வராமல் தடுப்பாற்றல் பெறலாம். ஆனால், பிறவகை வைரஸ்களால் டெங்கு காய்ச்சல் வரும் வாய்ப்புள்ளது.

    டெங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி..?

    >டெங்கு காய்ச்சலுக்கு உரிய சிகிச்சையில்லை என்பதால் அதைத் தடுப்பது மிகவும் முக்கியமாகிறது. பொது சுகாதார செயல் முறைகள் மூலம் கொசுக்கள் வளர்வதை தடுக்க வேண்டும். அல்லது குறைக்க வேண்டும். கொசுக்களைக் கொல்லும் மருந்தை எல்லா இடங்களிலும் அடிக்க வேண்டும். அப்படி வெளியே மருந்து அடிக்குபோது எல்லாக் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வைக்கவேண்டும். அப்படிச் செய்தால் வீட்டுக்குள்ளிருக்கும் கொசுக்களையும் கொல்லமுடியும். அதிகதூரம் பறக்க முடியாத இந்தக் கொசுக்கள் தாங்கள் வளரும் பகுதியிலுள்ளவர்களையே கடித்து நோயைப் பரப்புகின்றன. அவை சுத்தமான நீரிலேயே வளருகின்றன என்பதால் வீட்டுக்குள் நீரைச் சேர்த்து வைக்கும் இடங்கள் திறந்திருக்குமானால் வெளியே கிடக்கும் பாத்திரங்கள், டயர்களில் தண்ணீர் தேங்குமிடங்களில் பூந்தொட்டிகளில் உள்ள தண்ணீரில் எல்லாம் வளருகின்றன. எனவே நீர் வைக்கும் பாத்திரங்களை, தண்ணீர்த்தொட்டிகளை நன்கு மூடிவைக்க வேண்டும். மேல் நிலை தண்ணீர்த்தொட்டிகளை எல்லாம் கொசு புகமுடியாத மூடிகளைக்கொண்டு மூடிவைக்கவேண்டும். மழை நீரை சேகரிப்பாத்திரங்கள் வைத்திருந்தால் அவைகளை எடுத்துவிட வேண்டும்.

    உடலளவில் கொசுக்கடிப்பதைத் தடுக்க முழுக்கை சட்டை முழுக்கால் டவுசர்களை அணிய வேண்டும். கொசுவலைகளால் பலனில்லை. காரணம் இவை பகலில் மட்டுமே கடிக்கின்றன. கொசுக்களை அண்டவிடாமல் தடுக்கும் கிரீம்களை உடல் முழுவதும் பூசிக்கொள்ளலாம். அண்மைகாலமாக DEET-டை ஈதைல் டாலுவமைடுகொண்ட கிரிம்கள் பலன் தருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கிரீம்களை 4-5 மணிக்கொருமுறை பூசிக்கொள்ள வேண்டும். கொசு விரட்டும் மேட்கள், சுருள்கள் மற்றும் ஆவியாகும் மருந்துகள் பயன்படுத்தி வீட்டுக்குள் கொசு கடிப்பதை தடுக்கலாம்.

    டெங்கு காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நேரடியாகப் பரவுவதில்லை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: டெங்கு காய்ச்சலை கண்டுபிடிப்பது... மற்றும் தடுப்பது எப்படி? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top