தேங்காய் எண்ணெயின் பயன்கள் - தமிழர்களின் சிந்தனை களம் தேங்காய் எண்ணெயின் பயன்கள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Monday, June 17, 2013

    தேங்காய் எண்ணெயின் பயன்கள்


    தேங்காய் எண்ணெயின் பயன்கள் பல..

    தென்னை மரம் என்றாலே அது பல வகைகளில் மனிதனுக்கு உபயோகமாக உள்ளது.

    அதிலும் தேங்காயில் இருந்து பெறப்படும் தேங்காய் எண்ணெய் மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒரு விஷயமாகும்.

    பொதுவாக நமது தலைச் சருமத்தைப் பாதுகாக்க அடிப்படையான விஷயம் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான்.

    வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்த மருந்தாகும்.

    குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும்.

    அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது.

    வெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு அருமருந்தாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான்.

    புண்களில் நீர்த்தன்மையை அகற்றி அது விரைவாக ஆறுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.

    தலை முடியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது தேங்காய் எண்ணெய்.

    தேங்காய் எண்ணெயை தடவ பிடிக்காதவர்கள் கூட, இரவில் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் தலைக்குக் குளித்து விடலாம்.

    உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க உதவும் நல்ல லிப் பாம் ஆக இருப்பதும் தேங்காய் எண்ணெய் தான்.

    தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் விழுதை முகத்திற்குப் பயன்படுத்தலாம்.

    நல்ல பலனை அளிக்கும்.

    தலைப் பொடுகை நீக்க, தேங்காய் எண்ணெயுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை வைத்து தலைக்கு மசாஜ் செய்யுங்கள்.

    சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு தலைக்கு குளியுங்கள். இவ்வாறு ஒரு வாரத்தில் 2 முறை செய்தால் பொடுகு நீங்கிவிடும்.

    சளித் தொந்தரவு உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயை நன்கு சூடாக்கி இறக்கி அதில் ஒரு சிறிய கட்டி கற்பூரத்தைப் போட்டு வெதுவெதுப்பாக எடுத்து நெஞ்சுப் பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

    வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் நன்மை அளிக்கும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: தேங்காய் எண்ணெயின் பயன்கள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top