உடல் எடையை குறைக்கும் தயிர் - தமிழர்களின் சிந்தனை களம் உடல் எடையை குறைக்கும் தயிர் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, June 22, 2013

    உடல் எடையை குறைக்கும் தயிர்

    உடல் எடையை குறைக்கும் தயிர்
    ******************************

    தினமும் மூன்று வேளை தயிரை உட்கொண்டால் உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    தயிருக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு, தயிர் பலவகை இரைப்பை மற்றும் குடல் சம்பந்தபட்ட நோய்க்கிருமியை அழிக்கிறது, வயிற்றுப்போக்கினை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாகும்.

    தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்ததாகும். பாலைவிட அதிகமான ஊட்டச்சத்துகள் தயிரிலிருந்து கிடைக்கிறது.

    மிதமான லாக்டோஸ் இருப்பதனால் சகிப்புத்தன்மை இல்லாத மக்கள் தயிரை பாதகமில்லாமல் உட்கொள்ளலாம். ஏனென்றால் பாலின் உட்பொருளான லேக்டோசு என்ற முன்பொருள் பண்பாட்டு வளர்ப்பு காரணமாக லாக்டிக் அமிலமாக மாறிவிடுவது தான் இதற்கு காரணம்.

    இன்டர்நேஷனல் ஜெர்னல் ஆஃப் ஒபெசிட்டி என்ற சஞ்சிகையில் வெளிவந்த ஆய்வறிக்கையில், குறைந்த கொழுப்புச்சத்துள்ள தயிர் எடை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உடல் பருமான நபர்களுக்கு தினமும் மூன்று வேளை குறைந்து கொழுப்பு சத்து கொண்ட தயிர் கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர்களை ஆய்வு செய்ததில் 22 சதவிகித அளவுக்கு உடல் எடை குறைந்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் முன்பு இருந்ததை விட அழகாக தோற்றமளித்தனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: உடல் எடையை குறைக்கும் தயிர் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top