வேலைக்கு போகும் கர்ப்பிணிகளுக்கான உணவுகள் - தமிழர்களின் சிந்தனை களம் வேலைக்கு போகும் கர்ப்பிணிகளுக்கான உணவுகள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Sunday, June 23, 2013

  வேலைக்கு போகும் கர்ப்பிணிகளுக்கான உணவுகள்

   http://viyapu.com/images/news/large/tumblr_m4k1eq2wiU1r4svaqo1_1280.jpg

  கர்ப்பமாக இருக்கும் போது உடலுக்கு நிறைய சத்துக்கள் தேவைப்படும். அதற்கு சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு அவ்வப்போது சிறு இடைவெளி சாப்பிடுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, கர்ப்பமாக இருக்கும் போது செரிமான மண்டலமானது மெதுவாக இயங்கும்.

  மற்றொன்று, கர்ப்பத்தின் போது வயிறு பெரியதாவதால், ஒரே நேரத்தில் முழு உணவையும் சாப்பிட முடியாது. வீட்டில் இருக்கும் பெண்கள் என்றால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நிறைய பிரச்சனைகள் எழக்கூடும்.

  குறிப்பாக அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதால், அவர்கள் போதிய இடைவெளியில் எதையேனும் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய போதிய சத்துக்கள் கிடைக்காமல் போகும். எனவே வேலைக்கு செல்லும் கர்ப்பிணிகளின் உடலில் சத்துக்கள் நல்ல நிலையில் இருப்பதற்கு, அவ்வப்போது சிறு சிறு ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும்.

  • கர்ப்பிணிகள் அலுவலகத்திற்கு செல்லும் போது 2-3 வித்தியாசமான பழங்களை கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக ஆப்பிள், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி மற்றும் பேரிக்காய் மிகவும் சிறந்த பழங்கள்.

  எனவே இத்தகைய பழங்களை வெட்டி ஒரு டப்பாவில் கொண்டு செல்லாமல், அதனை அப்படியே கடித்து சாப்பிடுவது தான் சிறந்தது. பொதுவாக பழங்களை எப்போதும் வெளியே செல்லும் போது வெட்டி எடுத்துச் செல்லக் கூடாது.

  அதிலும் குறிப்பாக சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை அறவே வெட்டக்கூடாது. இவை அனைத்தையும் நறுக்கிய உடனே சாப்பிட வேண்டும். பழங்களை எடுத்து செல்ல முடியாவிட்டால், ஜூஸாக செய்து சாப்பிடலாம். இதனால் எளிதில் வயிறு நிறைவதோடு, உடல் வறட்சியை தடுக்கலாம்.

  • அலுவலகம் அல்லது வெளியே செல்லும் போது எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 1-2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். இதனால் நீர் வறட்சியை தவிர்க்கலாம்.

  • கர்ப்பிணிகளுக்கு உலர் பழங்கள் உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ஆகும். மேலும் இவை எளிதில் எடுத்துச் செல்ல கூடியதாக இருக்கும். குறிப்பாக வேலை அதிகமாக இருக்கும் போது, இதனை வாயில் போட்டு மெதுவாக மென்று சாப்பிட வசதியாக இருக்கும்.

  • கர்ப்பிணிகள் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்துவிடும். எனவே எப்போதும் கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வைத்துக் கொள்வது நல்லது. சாப்பிட எதுவும் இல்லாத போது இந்த பிஸ்கட் அவ்வப்போது ஒவ்வொன்றாக சாப்பிடுவது நல்லது.

  மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t35910-topic#ixzz2X07eEiKQ
  Under Creative Commons License: Attribution
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: வேலைக்கு போகும் கர்ப்பிணிகளுக்கான உணவுகள் Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top