வாய்வுக் குத்தலுக்கு ஒரு ரசம் - தமிழர்களின் சிந்தனை களம் வாய்வுக் குத்தலுக்கு ஒரு ரசம் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Friday, November 15, 2013

  வாய்வுக் குத்தலுக்கு ஒரு ரசம்

  வாய்வுக் குத்தலுக்கு ஒரு ரசம்

  சாதாரணமாக நாம் வீட்டில் வைக்கும் ரசத்தைப் போல புளி, உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு வைத்து, அத்துடன் கடைந்த துவரம் பருப்பு நீர்க்க விடவும். ஒரு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் - இவைகளுடன் ஐந்தாறு கண்டந்திப்பிலி, நாலைந்து பூண்டுப் பல் சேர்த்து, கொஞ்சமாக எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து, அரைத்து ரசத்தில் சேர்த்துக் கொதி வரும்போது இறக்கி கடுகு தாளிக்கவும். கொத்துமல்லியைக் கிள்ளிப் போடவும். இந்த ரசத்தை வெறும் வயிற்றில் - அதாவது, சாப்பிட உட்கார்ந்ததும் நேரடியாக ரசம் சாதத்துக்குப் பாய்ந்துவிட வேண்டும். மோர் வேண்டாம். எண்ணெய் குளியலுக்குப் பிறகு இரசத்தை ஒரு பிடி பிடித்தால் வாயுப் பிடிப்பாவது ஒன்றாவது! உடம்பு அமர்க்களமாக இருக்கும்!
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: வாய்வுக் குத்தலுக்கு ஒரு ரசம் Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top