ஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள் - தமிழர்களின் சிந்தனை களம் ஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, November 27, 2013

    ஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்

    ஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்

    குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பில் உள்ள துவாரத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும். இத்தகைய குடலிறக்கம் தொப்புள், அடிவயிறு போன்ற இடங்களில் உள்ள தசைப்பகுதிகளில் ஏற்படக்கூடியது. மேலும் இந்த பிரச்சனை சிறுவர் முதல் பெரியவர் வரை என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்த ஹெர்னியா என்னும் குடலியக்கம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
    மேலும் குடலிறக்கம் வந்தால், வயிற்றில் புடைத்த நிலையில் கட்டி உண்டாவதோடு, கடுமையான வலியையும் சந்திக்க நேரிடும். சில நேரங்களில் இந்த புடைப்பால் குடலானது நகர முடியாமல் மாட்டிக் கொண்டு, குடல் அடைப்பு அல்லது குடலானது அழுகிப் போகும் வாய்ப்பும் உள்ளது. இந்த ஹெர்னியா என்னும் குடலிறக்கத்தில் நிறைய வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். இத்தகைய ஹெர்னியா இருந்தால், உடல் எடை அதிகரிப்பது, கல்லீரல் நோய், தொடர்ச்சியான இருமல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.

    இப்போது அந்த குடலிறக்கத்தை சரிசெய்யும் சில இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போம்.
    ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்!!!

    அதிமதுரம்

    குடலிறக்கத்திற்கு அதிமதுரம் ஒரு சிறந்த நிவாரணி. அதற்கு ஒரு ஸ்பூன் அதிமதுர பொடியை 1/2 கப் பாலில் போட்டு கலந்து, வாரத்திற்கு ஒரு முறை குடிக்க வேண்டும். இதனால் அது பாதிப்படைந்த பகுதியில் உள்ள புடைப்பை நீக்கிவிடும்.

    இஞ்சி

    இஞ்சி கூட குடலிறக்கத்தை சரிசெய்யப் பயன்படும். அதிலும் குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த, ஒரு கப் இஞ்சி டீயை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இருப்பினும் இதனை அளவாக குடிப்பது நல்லது. இல்லாவிட்டதது அது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

    சீமைச் சாமந்தி டீ

    வெதுவெதுப்பான டீயை, அதிலும் சீமைச்சாமந்தி டீயை அவ்வப்போது குடித்து வந்தால், குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இல்லாவிட்டால் ப்ளாக் டீ குடித்தாலும், ஹெர்னியாவை பிரச்சனையை சரிசெய்யலாம்.

    மோர்
    ஹெர்னியா இருந்தால், ஒரு நாளைக்கு மூன்று முமுறை மோரைக் குடித்து வந்தால், நிச்சயம் குடலியக்கத்தால் ஏற்படும் வலியை தடுக்கலாம். இது டீ பிடிக்காதவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக விளங்கும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: ஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top