கறிவேப்பிலை - தமிழர்களின் சிந்தனை களம் கறிவேப்பிலை - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Tuesday, November 19, 2013

  கறிவேப்பிலை

  கறிவேப்பிலை

  உணவுல கறிவேப்பிலையைச் சேர்க்கறதே... வெறும் வாசனைக்காகத்தான்னு ரொம்ப பேர் நினைக்கறாங்க. ஆனா, இந்த கறிவேப்பிலை அற்புதமான மூலிகை. அது, உடம்புக்கு வலுவூட்டும்ங்கிறது பலபேருக்கு தெரியாத விஷயம். தலையில தேய்க்கக்கூடிய எண்ணெய், தைலம் மாதிரியான திரவப் பொருட்கள்ல கத்தாழை, அவுரி சேர்ப்பாங்க. இதுகூட, கறிவேப்பிலையும் அரைச்சு சேர்த்து வெச்சுக்கலாம். இப்படி சேர்க்கப்பட்ட எண்ணெய்/தைலத்தை தேய்ச்சுக்கிட்டா... நல்ல பலன் கிடைக்கும். இந்த எண்ணெய், முடிக்கு நல்ல பலம் கொடுக்குறதோட... முடி நல்லா வளரவும், முடி உதிராம இருக்கவும் செய்யும்.

  தினமும் 2 ஈர்க்கு கறிவேப்பிலையை காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா பித்தம் அதி கரிக்கிறதால வரக்கூடிய இளநரை மாறும். இதை தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டாத்தான் பலன் கிடைக்கும். சர்க்கரை நோயாளிங்க இதேபோல சாப்பிட்டு வந்தா நோய் கட்டுக்குள்ள வரும்.

  ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை, 2 டம்ளர் தண்ணி விட்டு, அரை டம்ளரா ஆகுறவரை நல்லா கொதிக்க வெச்சு குடிச்சா... மலச்சிக்கல் இல்லாம இருக்கலாம். கறிவேப்பிலையை துவையல் செஞ்சு சாப்பிட்டு வந்தா... வாந்தி, பேதி, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல்னு வயிறு சம்பந்தமான நோய்கள் சரியாகும். சுக்கு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை எல்லாம் சம அளவு எடுத்து, பொன் வறுவலா வறுத்து பொடியாக்குங்க. ஒரு உருண்டை சாதத்துல, அரை டீஸ்பூன் அளவுக்கு இந்தப் பொடியைப் போட்டு, நெய் விட்டு சாப்பிட்டா... ஜீரண உறுப்புகள் எல்லாம் வலுவாகும்.

  வேப்பிலை மாதிரி, கறிவேப்பிலையையும் மஞ்சள் சேர்த்து அரைச்சி பூசிட்டு வந்தா... முகப்பரு, தேமல் மட்டுமில்ல, மற்ற தோல்நோய்களும் சரியாகும்.
  கடுமையான காய்ச்சலால கஷ்டப்படுறவங்களுக்கு இந்த கறிவேப்பிலை கைகொடுக்கும். கறிவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்துக்கோங்க. கூடவே துளசி ஒரு கைப்பிடி, ஆடாதொடை இலை ஒண்ணு, வேம்பு ஒரு ஈர்க்கு, ஒரு டீஸ்பூன் சீரகம் இதையெல்லாம் ஒண்ணா போட்டு, 4 டம்ளர் தண்ணி விட்டு 2 டம்ளராகுற வரை கொதிக்க வையுங்க. இதை 2 மணி நேரத்துக்கு ஒரு டேபிள்ஸ்பூன் வீதம் குடிச்சுட்டு வந்தா... எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் சரியாயிரும். காய்ச்சல் இருந்தா 2, 3 நாள் வரை இதை குடிச்சா... நிச்சயம் பலன் கிடைக்கும்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: கறிவேப்பிலை Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top