தேன் இளைக்கும்... நெய் பெருக்கும் ! - தமிழர்களின் சிந்தனை களம் தேன் இளைக்கும்... நெய் பெருக்கும் ! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, November 6, 2013

    தேன் இளைக்கும்... நெய் பெருக்கும் !

    தேன் இளைக்கும்... நெய் பெருக்கும் !

    அநியாயத்துக்கு இளைச்சுப்போன உடம்பை பெருக்கச் செய்றது எப்படி? அதேமாதிரி, அநியாயத்துக்கு பெருத்துப்போன உடம்பை இளைக்கச் செய்றது எப்படி?னு தெரியாம பலபேரு திண்டாடிக்கிட்டு நிப்பாங்க. என்னென்னவோ வைத்தியமெல்லாம் பண்ணிப் பார்த்து, காசையெல்லாம் கரைச்சிட்டு நிக்கறவங்கள பட்டியல் போட்டா... அது கன்னியாகுமரியில இருந்து காஷ்மீர் வரைக்கும் கூட நீளும். நீங்க அந்தப் பட்டியல்ல சேராம இருக்கணும்னா... இந்த பாட்டி சொல்ற வைத்தியத்தை பக்குவமா செஞ்சுப் பார்த்து, பலனைச் சொல்லுங்க.
    உடல் இளைக்க... உடல் பருக்க...

    அமுக்கிராங்கிழங்கு கால் கிலோ எடுத்துக்கோங்க... அதை நல்லா காய வச்சி பொடியாக்குங்க. பிறகு, ஒரு பாத்திரத்தில பால் ஊத்தி தேவையான அளவு தண்ணி ஊத்தி அதுக்கு மேல வேடு கட்டி (பாத்திரத்தின் வாய் பகுதியில் துணியைக் கட்டி வைப்பது) அதுக்கு மேல அமுக்கிராங்கிழங்கு பொடியை வச்சு அவிக்கணும். நல்லா ஆவி வந்ததும் இறக்கி வச்சு சூடு ஆறினதும் திரும்பவும் பொடியாக்கி வச்சிக்கிடணும். அதுல கால் ஸ்பூன் எடுத்து கொஞ்சம் தேன் சேர்த்து காலையிலயும் சாயங்காலமும் வெறும் வயித்துல சாப்பிடணும். இதை ஒரு மண்டலமோ, ரெண்டு மண்டலமோ சாப்பிடுங்க. பருத்த தேகம் நாளடைவுல மெலிஞ்சுடும்.
    இதே சூரணத்தை கால் ஸ்பூன் அளவு எடுத்து நெய் சேர்த்து காலைலயும் சாயங்காலமும் சாப்பிட்டு வந்தா... எலும்பும் தோலுமா உள்ளவங்களோட உடல் பருக்கும்.

    சதாவரிக் கிழங்கு சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து அதோட கொஞ்சம் நெய் சேர்த்து சாப்பிட்டாலும் உடல் பருக்கும்.

    முடி உதிர்தல், இளநரை சரியாக...

    அடுத்ததா முடி உதிர்தல், இளநரைனு பொண்ணுங்க ரொம்பவே கஷ்டப்படுவாங்க. அதுக்கு சில வைத்தியம் சொல்றேன், கேளுங்க.

    கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா... முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.

    கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட் டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும்.

    அவுரி (நீலி), கரிசலாங்கண்ணி (பிருங்காதி) இது ரெண்டையும் சம அளவு எடுத்துக்கிட்டு, இதுகளைவிட 3 மடங்கு அதிகமா தேங்காய் எண்ணெய் சேர்த்து பதமா காய்ச்சணும். இதை தினமும் தலைக்கு தேய்ச்சுட்டு வந்தா... நரை விழுறது சரியாகும்.

    மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் ஒண்ணரை லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கி தேய்ச்சிட்டு வந்தா... கூந்தல் நல்லா வளரும், அதோட நரை விழுறதையும் தடுக்கும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: தேன் இளைக்கும்... நெய் பெருக்கும் ! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top