சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதா பாதம்? - தமிழர்களின் சிந்தனை களம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதா பாதம்? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Tuesday, November 12, 2013

    சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதா பாதம்?

    சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதா பாதம்?

    டெங்கு காய்ச்சல் பரவி பலரையும் பீதியடைய வைத்தபோது, காய்ச்சலுக்குத் தீர்வாக, தமிழக அரசே சித்த மருத்துவத்தின் மூலம் 'நிலவேம்பு கஷாயத்தை’ இலவசமாக விநியோகித்து நோயின் வீரியத்தைக் குறைத்தது. இதில், நிலவேம்பு கஷாயம் பற்றிய விழிப்பு உணர்வு மக்களுக்குப் போய் சேரவேண்டும் என்பதற்காக பெரிதும் முயற்சி எடுத்தவர், சித்த மருத்துவர் வீரபாபு. தற்போது, முற்றிய சர்க்கரை நோயினால் கால், விரல்களை இழக்க நேரிடுபவர்களுக்கு சித்த மருத்துவத்தில் இருக்கும் அற்புத மூலிகை மருந்தினைப் பயன்படுத்தி குணப்படுத்தலாம் என்று புது நம்பிக்கை வார்க்கிறார். 

    இதுபற்றி சித்த மருத்துவர் கே. வீரபாபுவிடம் பேசினோம்.
    'சர்க்கரை நோய் ஒருவருக்கு இருந்தால், முதலில் பாதிப்புக்குள்ளாவது அவருடையப் பாதங்கள்தான். இந்தப் பாதிப்புக்கான சிகிச்சை மற்ற மருத்துவ முறைகளில் இருந்தாலும், அதற்கான பலன்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.

    சர்க்கரை நோய் காரணமாக, பாதங்களில் ஏற்படும் புண்களுக்கான சிகிச்சைமுறை சித்த மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தே பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், சரியான விழிப்பு உணர்வு இல்லை. 

    கால்களை எடுக்கக்கூடிய அளவில் இருக்கும் எந்தப் புண்களுக்கும் சித்த மருத்துவத்தில் சிகிச்சை உண்டு. ஒரு வருடமாக ஆறாத புண்ணையும், ஒரே மாதத்தில் குணப்படுத்திவிட முடியும். ஆரம்ப நிலையில் இருக்கும் பாதப் புண்களை ஒரே வாரத்தில் சரி செய்ய முடியும். இதில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை'' என்றவர் சிகிச்சை முறைகளைச் சொன்னார்.

    ''சிகிச்சை முறை முழுவதும் வெளிப் பிரயோகம் மட்டுமே, அவர்கள் விரும்பும்பட்சத்தில் சர்க்கரை நோயைக் கட்டுபடுத்த முடியாத நிலையிலேயே, உட்கொள்ள மாத்திரைகள் கொடுக்கப்படும். மேலும், இந்தச் சிகிச்சை மத்தன் தைலத்தைப் பயன்படுத்தி கட்டுப்போடும் முறையில் கையாளப்படுகிறது.
    தேங்காய் எண்ணெயில் ஊமத்தன் இலைச் சாறைக் கலந்து கால்களில் கட்டுப் போடப்படும்' என்றார்.

    செலவில்லா சிகிச்சை!

    இந்த சிகிச்சை முறையை அறிமுகபடுத்தும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவ மனையில் சிகிச்சை பெறலாம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதா பாதம்? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top