காலை உணவின் முக்கியத்துவம் - தமிழர்களின் சிந்தனை களம் காலை உணவின் முக்கியத்துவம் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, August 17, 2011

    காலை உணவின் முக்கியத்துவம்

    http://freeblogspot.org/files/2011/01/Food-Safety.jpgஓர் ஆய்வின் போது தற்போதைய வேலை நேர மாற்றங்கள், நிர்ப்பந்தங்கள் காரணமாக அலுவலகங்களுக்கும், கல்விக் கூடங்களுக்கும் பறப்பவர்கள் காலை உணவைப் புறக்கணித்து விட்டு அதை ஈடுகட்ட மதியமும், இரவும் நன்றாகச் சாப்பிடுவது தெரிய வந்துள்ளது.

    கொழுப்புச்சத்து உட்பட காலை உணவுதான் பல மணிநேரம் பணிகளில் நன்கு செரித்து உடலால் கிரகிக்கப்படுகிறது. அதோடு காலையில் போதியளவு ஆகாரம் உண்டால் தான் இரவில் ‘லெப்டின்’ என்ற ஹோர்மோன் போதியளவு உற்பத்தியாகும்.

    இது தூக்கத்தில் பசியைக் கட்டுப்படுத்தி காலையில் நன்கு பசி எடுக்க இயற்கை செய்துள்ள ஏற்பாடு. இரவு அதிகம் சாப்பிடுவதால் காலையில் அது அதிகம் சுரந்து பசியையும், ஜீரணத்தையும் பாதிக்கும். உடலின் சில நுட்பமான உறுப்புக்கள் பகலில் சுறுசுறுப்பாகவும் இரவில் அடங்கியும் செயற்படும் வண்ணம் அமைத்துக் கொள்வதே ஆரோக்கியத்துக்கு உகந்தது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: காலை உணவின் முக்கியத்துவம் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top