கீரைகளின் மருத்துவ குணங்கள் - தமிழர்களின் சிந்தனை களம் கீரைகளின் மருத்துவ குணங்கள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, August 17, 2011

    கீரைகளின் மருத்துவ குணங்கள்

    Spinach
    நாம் அன்றாடம் உபயோகிக்கும் கீரைகளின் மருத்துவ குணங்கள்

    அகத்தி கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.

    காசினிக் கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். சூடு தணிக்கும்.

    சிறு பசலைக் கீரை சரும நோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குறைக்கும்.

    பசலைக் கீரை தசைகளை பல மடையச் செய்யும்.

    கொடி பசலைக் கீரை வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

    மஞ்சள் கரிசலை கல்லீரலை பல மாக்கும். காமாலையை விலக்கும்.

    குப்பை கீரை பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.

    அரைக்கீரை ஆண்மை பெருக்கும்.

    புளியங்கீரை சோகையை விலக்கும். கண் நோய் சரியாக்கும்.

    பிண்ணாக்கு கீரை வெட்டையை, நீர் கடுப்பை நீக்கும்.

    பரட்டைக் கீரை பித்தம், கபம், நோய்களை விலக்கும்.

    பொன்னாங்கன்னி மேனி அழகையும், கண் ஒளியை அதிகரிக்கும்.

    சீமைப்பொன்னாங்கன்னி மேனியை மினு மினுப்பாக்கும்.

    சுக்கா கீரை ரத்த அழுத்தத்தை சீர் செய்யும். சிரங்கு மூலத்தை போக்கும்.

    வெள்ளை கரிசலைக்கீரை ரத்த சோகையை நீக்கும்.

    முருங்கைக் கீரை நீரிழிவை நீக்கும். கண்கள் உடல் பலம் பெறும்.

    வல்லாரை மூளைக்கு பலம் தரும்.

    முடக்கத்தான் கீரை கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.

    பண்ணக் கீரை சிரங்கும், சீதளமும் விலக்கும்.

    புதினாக் கீரை ரத்தம் சுத்தி செய்யும். அஜீரணம் அகற்றும்.

    நஞ்சு முண்டான் கீரை விஷம் முறிக்கும்.

    தும்பை அசதி, சோம்பல் நீக்கும்.

    கல்யாண முருங்கை கீரை சளி, இருமலை துளைத்தெறியும்.

    முள்ளங்கிகீரை நீரடைப்பு நீக்கும்.

    பருப்பு கீரை பித்தம் விலக்கும். உடல் சூட்டை தணிக்கும்.

    புளிச்ச கீரை கல்லீரலை பலமாக்கும். மாலைக்கண் நோயை விலக்கும். ஆண்மை பலம் தரும்.

    மணலிக்கீரை வாதத்தை விலக்கும். கபத்தை கரைக்கும்.

    மணத்தக்காளி கீரை வாய், வயிற்றுப்புண் குணமாக்கும். தேமல் அகலும்.

    முளைக் கீரை பசியை ஏற்படுத்தும். நரம்பு பலமடையும்.

    சக்கரவர்த்தி கீரை தாது விருத்தியாகும்.

    வெந்தயக் கீரை மலச்சிக்கலை நீக்கும். மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத,
    காச நோய்களை விலக்கும்.

    தூதுவளை ஆண்மை தரும் சரும நோய் விலக்கும். சளி நீக்கும்.

    தவசிக் கீரை இருமலை போக்கும்.

    சாணக் கீரை காயம் ஆற்றும்.

    வெள்ளைக் கீரை தாய்ப்பாலை பெருக்கும்.

    விழுதிக் கீரை பசியைத் தூண்டும்.

    கொடி காசினி பித்தம் தணிக்கும்.

    வேலைக் கீரை தலைவலியை போக்கும்.

    துயிளிக் கீரை வெள்ளை வெட்டை விலக்கும்.

    துத்திக் கீரை வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

    கார கொட்டிக்கீரை மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

    மூக்கு தட்டை கீரை சளியை அகற்றும்.

    நருதாளி கீரை ஆண்மையை பெருக்கும். வாய்ப்புண் அகற்றும்.

    மேலே குறிப்பிட்ட சில கீரை வகைகளில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால்
    உடலுக்கு சிறு தீங்கு விளைவிப்பவைக்கு உதாரணம்,

    அகத்தி கீரை மருந்து சக்தியை முறியடிக்கும்.

    பிண்ணாக்கு கீரை வாத கரப்பான் வரும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: கீரைகளின் மருத்துவ குணங்கள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top