குழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் ?
பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும் .தண்ணீர் கூட தர தேவை இல்லை .
இதற்க்கு EXCLUSIVE BREAST FEEDING என்று பெயர் .கோடைகாலத்தில் கூட நீர் தர தேவை இல்லை .ஏனெனில் பாலில்80 % நீர் உள்ளது .
இதற்க்கு EXCLUSIVE BREAST FEEDING என்று பெயர் .கோடைகாலத்தில் கூட நீர் தர தேவை இல்லை .ஏனெனில் பாலில்80 % நீர் உள்ளது .
இணை உணவுக்கு ஆங்கிலத்தில் WEANING என்று பெயர் .
WEANING : the systematic introduction of suitable food at the right time in addition to mothers milk in order to provide needed nutrients to the baby (UNICEF)
WEANING என்றால் முற்றிலும் தாய்ப்பாலை நிறுத்திவிட்டு உணவு ஆரம்பித்தல் என்று பலர் தவறாக கருதுவதால் தற்போது COMPLEMENTARY FEEDING என்ற சொல்லே பரவலாக பயன்படுத்த படுகிறது .
நான்கு மாதங்களுக்கு பிறகே குழந்தைகள் அறைதிட (SEMISOLID ) உணவை செரிக்க கூடிய சக்தியை அடைகின்றன .
தலை நன்கு நிமிர்ந்து நிற்கும் சக்தியை அடைவதும் 4 மாதத்திற்கு பிறகே
குழந்தையின் எடை 5 மாதத்தில் பிறந்ததை போல் இரு மடங்காக அதிகரிப்பதால் அதன் உணவு தேவை அதிகரிக்கும் . மேலும் உடலில் உள்ள கால்சியம் மற்றும் இரும்பு சத்து சேமிப்புகள் குறைய தொடங்கும் .
குடலில் உள்ள செரிமான நொதிகள் (INTESTINAL ENZYMES ) நன்கு சுரக்க ஆரம்பிப்பதும் 4 -5 மாதங்களில்தான் .
எனவே 5 வது மாத முடிவிலோ அல்லது 6 மாத ஆரம்பத்திலோ இணை உணவுகளை ஆரம்பிப்பது நல்லது .
முதலில் ஏதேனும் ஒரு தானியத்தை கொடுக்கவேண்டும் (அரிசி ,கோதுமை ,ராகி ) அது பழகிய பிறகே இரண்டு அல்லது மூன்று தானிய கலவைகளை சேர்த்து அரைத்து தர வேண்டும் .
அரிசி சாதம் மிகவும் எளுதில் ஆரம்பிக்க சிறந்தது .ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் மட்டும் தரவேண்டும் .படிப்படியாக இந்த அளவை அதிகரிக்க வேண்டும் .
தானியங்கள் ஒத்துகொண்ட பிறகே பருப்பு வகைகள் கொடுக்க வேண்டும் .
ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உடல் எடையை போல் நூறு மடங்கு கலோரி தேவை . அதாவது 6 கிலோ குழந்தைக்கு 600 கிலோ கலோரி நாள் ஒன்றுக்கு தேவை .எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி சிறிது சிறிதாக பாலும் இணை உணவும் தரவேண்டும் .
ஐஸ் போடாத வீட்டில் செய்த பழச்சாறு 6 மாதம் முதல் தரலாம் . ஆரஞ்சு , ஆப்பிள் சிறந்தது .
நெய் ,எண்ணெய் முதலியவற்றை 5 -6 மாதம் முதல் தரலாம்
முட்டை - 7 -9 மாதங்களில் தரலாம் . முதலில் மஞ்சள் கருவும் பின்பே வெள்ளை கரு தரவேண்டும் . ஏனெனில் வெள்ளை கரு சில குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் .
6 -8 மாதங்களில் மசித்த உருளை கிழங்கு , மசித்த பருப்பு ஆகியவற்றை தரலாம் .
மென்று சாப்பிடக்கூடிய உணவுகளை (சப்பாத்தி ) 9 -12 மாதங்களில் தரவேண்டும் .
ஒரு வயது ஆகும்போது வீட்டில் செய்யும் எல்லா உணவுகளையும் தரலாம் .
அசைவ உணவை ஒரு வயதுக்கு பின்பே ஆரம்பிப்பது நல்லது .(முட்டை சைவம் தானே ?!!)
ஒரு வயதுடைய குழந்தை அம்மா சாப்பிடும் அளவில் பாதி அளவு உணவு சாப்பிடவேண்டும் .(மூன்று வயதில் அப்பா சாப்பிடும் அளவில் பாதி )
ஒரு வயதில் உள்ள குழந்தைக்கு தினமும் 1000 கிலோ கலோரி அளவு சக்தி தேவை .
தாய்ப்பாலை மேலே சொன்ன உணவுடன் சேர்த்தே தரவேண்டும் .இரண்டு வயது வரை தருவது கட்டாயம் .அதற்க்கு மேல் கொடுப்பது தனிப்பட்ட விருப்பம் .,( அப்துல் கலாம் ஐந்து வயது வரை தாய்ப்பால் குடித்தவர் )
COMPLEMENTARY FEEDING -இணை உணவு ஒரு மிகப்பெரிய பகுதி . முடிந்தவரை எழுதி உள்ளேன் .எனவே உங்க சந்தேகங்களை பின்னுட்டத்தில் தெரியபடுத்தவும் .
thanks:http://doctorrajmohan.blogspot.com/2011/03/weaningcomplementary-feeding.html
0 comments:
Post a Comment