கர்ப்ப காலத்தில் வாந்தியும், மயக்கமும் ஏற்படுவது இயற்கைதான். சில பெண்கள் வாந்தி, மயக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் சந்தோஷப்படுவதற்காகவே இந்த செய்தி. - தமிழர்களின் சிந்தனை களம் கர்ப்ப காலத்தில் வாந்தியும், மயக்கமும் ஏற்படுவது இயற்கைதான். சில பெண்கள் வாந்தி, மயக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் சந்தோஷப்படுவதற்காகவே இந்த செய்தி. - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, August 28, 2011

    கர்ப்ப காலத்தில் வாந்தியும், மயக்கமும் ஏற்படுவது இயற்கைதான். சில பெண்கள் வாந்தி, மயக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் சந்தோஷப்படுவதற்காகவே இந்த செய்தி.

    கர்ப்ப காலத்தில் வாந்தியும், மயக்கமும் ஏற்படுவது இயற்கைதான். சில பெண்கள் வாந்தி, மயக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் சந்தோஷப்படுவதற்காகவே இந்த செய்தி.
    கர்ப்ப காலத்தில் வாந்தியும் மயக்கமும் இருக்கத்தான் செய்யும். ஆனால் எல்லா கர்ப்பிணிகளுக்கும் இருக்கமா என்றால் இல்லை என்பதுதான் பதில்.

    எப்போதும், வாந்தி எடுத்துக் கொண்டும், தலைச்சுற்றலினால்பாதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிக அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என்கிறது புதிய ஆய்வு ஒன்று.

    தலைசுற்றல், வாந்தி, மயக்கம் ஆகியவை ஆரோக்கியமான தாய்மையின் அடையாளங்கள்தான் என்று குறிப்பிடும் ஆய்வாளர்கள், இந்த அறிகுறிகள் காணப்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இதயம் தொடர்பான நோய் பாதிப்பில் இருந்தும் தப்புகிறார்கள் என்ற மகிழ்ச்சியான தகவலையும் தெரிவிக்கின்றனர்.

    மேலும், இந்த அறிகுறிகள் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு இருந்தால் அவருக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு பெருமளவில் குறைவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மார்களை தங்களது ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் 3 மற்றும் 7வது வயதை அடைந்தபோது, அந்த குழந்தைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

    அப்போது, தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற அசவுகரியங்களுக்கு ஆளான பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இருந்த பெண்களுக்கு பிறந்த குழந்தைகளைக் காட்டிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டது தெரிய வந்தது.

    இதுபற்றி ஆய்வாளர்கள் கூறும்போது, தாய்மைக் காலத்தில் நிகழும் ஹார்மோன் சுரப்பே தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றுக்கு காரணம். இது தாயின் வயிற்றுக்குள் வளரும் கருவையும், கருப்பையையும் பாதுகாக்கும் நிகழ்வுதான் என்றும் தெரிவித்தனர்.

    எனவே கர்ப்ப காலத்தின் போது வாந்தி, மயக்கம் வரும்போது தளர்ந்து சோர்வடையும் தாய்மார்கள், தங்களது ஆரோக்கியமான குழந்தைக்கு இவையும் அஸ்திவாரம் என்று நினைத்து உற்சாகம் கொள்ளுங்கள்.


    நன்றி :- வெப்துனியா
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: கர்ப்ப காலத்தில் வாந்தியும், மயக்கமும் ஏற்படுவது இயற்கைதான். சில பெண்கள் வாந்தி, மயக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் சந்தோஷப்படுவதற்காகவே இந்த செய்தி. Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top