புற்றுநோயை எதிர்க்கும் காரட் - தமிழர்களின் சிந்தனை களம் புற்றுநோயை எதிர்க்கும் காரட் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, August 17, 2011

    புற்றுநோயை எதிர்க்கும் காரட்

    புற்றுநோயை எதிர்க்கும் காரட்http://howmanycaloriesshouldieatadayinfo.com/wp-content/uploads/2011/07/carrot.jpg
    காரட் சாப்பிடுவதால் நம்முடைய உடலில் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் உருவாகிறது என்பது தெரிந்த செய்திதான். ஆனால் காரட்டில் உள்ள எந்த பகுதி புற்றுநோய் கட்டிகளை அழிக்கிறது என்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்திலும், டென்மார்க்கிலும் உள்ள நியூகாஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றிய ஆராய்ச்சிகளை எலிகளைக் கொண்டு செய்துவருகிறார்கள். எலிகளில் காணப்படும் புற்றுநோய்க்கட்டிகள் மூன்றில் ஒருபங்காக குறைவது எதனால் என்பதற்கான விடை இப்போது கிடைத்திருக்கிறது.

    காரட்களை சேமிக்கும்போது வேர்ப்பகுதிகளில் கறுப்பு நிற புள்ளிகள் தோன்றி அழுகல் தொடங்கி விடுகிறது. இந்த நோய்க்கு liquorice rot என்று பெயர். இந்த நோயை ஒழிக்க Falcarinol எனப்படும் இயற்கையான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பூச்சிக்கொல்லிக்கு புற்றுநோய்க்கட்டிகள் வளர்ச்சியடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வில் புற்றுநோய்க் கட்டிகளுடன் கூடிய 24 எலிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த எலிகளை மூன்று குழுக்களாக பிரித்துக் கொண்டனர். முதல் குழுவிற்கு நமக்கு நன்றாகத் தெரிந்த ஆரஞ்சுநிற காரட்டுகள் பதினெட்டு வாரங்களுக்கு உண்ணக் கொடுக்கப்பட்டன. மற்றொரு குழுவிற்கு falcarinol தேவையான அளவில் சேர்க்கப்பட்ட காரட்டுகள் கொடுக்கப்பட்டன. மூன்றாவது குழுவிற்கு falcarinol ன் அளவு அதிகரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. மூன்றாவது குழுவில் புற்றுநோய்க்கட்டிகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது அறியப்பட்டது.

    நியூகாஸில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கிர்ஸ்டன் ப்ராண்ட் என்பவர் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். புற்றுநோய்க்கட்டிகளை கட்டுப்படுத்த எவ்வளவு தேவை என்பதை துல்லியமாக கண்டறிய இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக டாக்டர் ப்ராண்ட் கூறுகிறார். மேலும் காய்கறிகளைப் பயிரிடும்போதே மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டுவருகின்றன.

    பச்சைக்காரட், சமைக்கப்பட்ட காரட், காரட்சாறு இவற்றை உணவில் சேர்க்கும்போது அவை புற்றுநோய்க்கட்டிகளில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வுகள் தொடருகின்றன.

    Falcarinolன் அளவு அதிகரிக்கும்போது நச்சுத்தன்மையை விளைவிக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மை. ஆனால் ஒரே சமயத்தில் 400 கிலோ காரட்டை சாப்பிடுவதால் மட்டுமே ஆபத்தான அளவிற்கு நச்சுத்தன்மையை உண்டாக்கப்படுமாம். Falcarinol என்னும் நச்சு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை உடலுக்குள் தூண்டிவிடுகிறது என்பதுமட்டுமே இதுவரையிலான கண்டுபிடிப்பு.

    இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2005/02/050212184702.htm
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: புற்றுநோயை எதிர்க்கும் காரட் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top