பல நோ ய்களு க்கு மரு ந்தாகு ம் ஆப்ரிகாட் பழங்கள்-Aprikat remedy for many diseases of fruit - தமிழர்களின் சிந்தனை களம் பல நோ ய்களு க்கு மரு ந்தாகு ம் ஆப்ரிகாட் பழங்கள்-Aprikat remedy for many diseases of fruit - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

      Sunday, January 19, 2014

      பல நோ ய்களு க்கு மரு ந்தாகு ம் ஆப்ரிகாட் பழங்கள்-Aprikat remedy for many diseases of fruit

      Aprikat remedy for many diseases of fruit
      puthiyatamil.net

      பல நோ ய்களு க்கு மரு ந்தாகு ம் ஆப்ரிகாட் பழங்கள்



      அதிக சத்து நிறைந்த, அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள் (Apricot Fruits - த‌மி‌ழி‌ல் ச‌ர்‌க்கரை பாதா‌மி எ‌ன்று அ‌றிய‌ப்படு‌கிறது), பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன.

      இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிறபழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன.

      பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும், குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மகத்தானது.

      தோல் நோய்களை நீக்கும்:

      இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப் பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்தவல்லவை. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

      நரம்புகளை வலுப்படுத்தும்:

      பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது.

      இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு ஏற்றது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள் எல்.டி.எல், என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. லைகோபின் என்னும் சத்தானது செல் முதிர்வை தடுக்கிறது. இதிலுள்ள டிரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்துகின்றது.

      நோய் எதிர்ப்பு சக்தி:

      மிகவும் சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழம் குழந்தைகளுக்கு ஏற்றது. இருதய நோய், சில வகை புற்றுநோயை கூட எதிர்த்து போராடும் சத்துக்கள் அடங்கிய பழம் இது. ஆப்ரிகாட்டை நன்கு கழுவி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மசித்துக் கொள்ளலாம். 

      பின்னர் பாலில் ஓட்ஸ், சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து கெட்டியானதும், தீயை அணைத்து ஆறவிடவும். ஆறியதும் ஆப்ரிகாட் மசித்ததையும் ஓட்ஸையும் கலந்து குழந்தைக்கு ஊட்டவும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

      கண்பார்வை தெளிவாகும்:

      வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகப்படுத்துகிறது. தினமும் 2 ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சுப் பழங்களை இரவில் சாப்பிட்டு வர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அழிவும், கட்டுப்படுத்தப்படும்.

      மலை வாழைப்பழம் 1, ஆப்ரிகாட் 4 ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தயிர் அரை கோப்பை கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் படுக்கும் பொழுது சாப்பிட்டு வர பார்வைதிறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும். 

      வெப்துனியா
      • Blogger Comments
      • Facebook Comments

      0 comments:

      Item Reviewed: பல நோ ய்களு க்கு மரு ந்தாகு ம் ஆப்ரிகாட் பழங்கள்-Aprikat remedy for many diseases of fruit Rating: 5 Reviewed By: Unknown