www.PuthiyaTamil.net |
இவ்வாறு உடற்பயிற்சி செய்து வருவதால் இக்காலத்திலும் நமது உடல் இதமாக இருக்கும். உடற்பயிற்சி உடலின் பாகங்கள் நன்றாக வேலை செய்யவும், உடல் செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றது. உடலில் ஒரு புத்துணர்வு வந்து அன்றைய தினத்தை சுறுசுறுப்பான தினமாக நம்மை தயார் செய்யும் வண்ணம் உடற்பயிற்சிகள் விளங்குகின்றன
உடற்பயிற்சிகளை தினமும் மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டியது அவசியமானதாகும். குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்யும் போது நாம் கவனிக்க மற்றும் கடைபிடிக்க வேண்டிய சில காரியங்களைப் பற்றி இப்போது நாம் பார்ப்போம். பொதுவாக நாம் செய்யும் உடற்பயிற்சிகளில் நாம் சிறிதளவு மாற்றங்களை செய்து கொள்ள வேண்டியிருக்கும்.
குளிர்காலம் பொதுவாக நமது உடலையும், சருமத்தையும் பாதிக்கக் கூடியதாக இருக்கும். நமது உடம்பை இத்தகைய குளிரில் வெளிப்படுத்தினால் சளி மற்றும் இருமல் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த காலத்தில் திறந்த வெளியில் எந்த ஒரு கவசமும் இன்றி, அதாவது மேலாடை, சாக்ஸ் மற்றும் தடியான காற்சட்டை ஆகியவற்றை போடாமல் செல்வது உடலுக்கு கேடு விளைவிக்கும்.
நீங்கள் ஒரு வேளை வெளியே சென்று உடற்பயிற்சி செய்ய முற்பட்டால் மேல் கூறிய விஷயங்களை கடைப்பிப்பது நிச்சயம் நமக்கு நன்மை தரும். உடலில் உள்ள மூட்டு எலும்புகள் குளிர்காலத்தில் இறுகிய நிலையில் இருக்கும். தசைகளும் குளிரில் உலர்ந்து இருப்பதால் அதிக அளவில் பயிற்சி மேற்கொள்ளும் போது வலியும், வீக்கங்களும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஆகையால் உங்களது சக்திக்கேற்ப உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுவது மிகவும் அவசியமாகும். குளிர்காலத்தில் யோகா, நடனம் மற்றும் தியானம் ஆகிய வீட்டுக்குள் இருந்தபடி செய்யக் கூடிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் அவை சிறந்த பலன்களை தருகின்றன.
இந்த வழிமுறைகள் உடலை கட்டுகோப்பாக வைப்பது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகின்றன. அதுமட்டுமல்லாமல் குளிர்கால சூழலில் நாம் வெளியே செல்லாமல் இந்த பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் மற்றும் மிகுந்த பலனையும் தரக்கூடியதாகவும் இருக்கும்.
நன்றி -http://www.maalaimalar.com/2014/01/06115849/Winter-Exercise-Methods.html
0 comments:
Post a Comment