கருப்பட்டி மருத்துவம்!Jaggery medicine! - தமிழர்களின் சிந்தனை களம் கருப்பட்டி மருத்துவம்!Jaggery medicine! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, January 19, 2014

    கருப்பட்டி மருத்துவம்!Jaggery medicine!

    கருப்பட்டி மருத்துவம்!Jaggery medicine!

    கருப்பட்டி மருத்துவம்!Jaggery medicine!

    www.puthiyatamil.net
    puthiyatamil.net

    கருப்பட்டி மருத்துவம்!

    கிராமங்களில் இன்றும் ‘கருப்பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. அதிலும் இனிப்புக்காக மட்டும் இதைப் பயன்படுத்த வில்லை. இந்த கருப்பட்டியில் கூடுதலான மருத்துவத் தன்மை இருப்பதாலும்தான் அதைப் பயன்படுத்தினார்கள். பனங்கருப்பட்டி யில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தின்பண்டமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படி உடல் நலனுக்கு மிகவும் உகந்தது என்பதால் இப்போது நகர மக்களிடையேயும் கிராக்கி அதிகரித்து வருகிறது. இப்போது பரவலாகக் காணப்படும் டெங்கு நோயைக் குணப்­ப­டுத்த கரும்பு கருப்­பட்­டியும் சின்­ன­வெங்­கா­யமும் சிறந்த மருந்­தாகும். என இலங்கை கரும்பு ஆராய்ச்சி நிலையம் இந்­திய கரும்பு ஆராய்ச்சி நிலை­யத்­துடன் இணைந்து மேற்­கொண்ட ஆய்வில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. - ‪#‎ பருவம்‬ அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
    ‪#‎ சீரகத்தை‬ வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். ‪#‎ குப்பைமேனிக்‬ கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். ‪#‎ ஆண்மையை‬ வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது. ‪#‎ சர்க்கரை‬ நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.. சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். முகநூல்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: கருப்பட்டி மருத்துவம்!Jaggery medicine! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top