வேலிப்பருத்தி பயன்பாடுகள்
வேலிப்பருத்தி பயன்பாடுகள் |
2. இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும்.
3. இதன் இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் கொடுக்கக் குழந்தைகளின் செரியாமை, வாந்தி, மந்தம், மாந்த இழப்பு, கை,கால் சில்லிட்டுப் போதல், சுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளுக்கும் கொடுக்கலாம்.
4. இது நெஞ்சில் சேர்ந்து இருக்கின்ற கோழையை அகற்றி வாந்தியை உண்டாக்குவதோடு புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது. குழந்தைகளுக்கு காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கு இதன் இலைச்சாறை தடவலாம்.
5. இதன் இலையை இடித்துப் பிழிந்த சாற்றை ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வர ஆஸ்த்துமா எளிதில் குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட புண்களுக்கு இலையை அரைத்துக் கட்டி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.
6. உடம்பில் அடிபட்ட வீக்கங்கள் மற்றும் காயங்களுக்கு இதன் இலைச் சாற்றையும், சுண்ணாம்பையும் கலந்து வீக்கம் ஏற்பட்ட இடத்தில் பூசி வர எளிதில் குணமாகும்.
7. வாத வலி, வீக்கம் ஏற்பட்ட குழந்தைகளுக்கு இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம், பொடித்துக் காயச்சி இளஞ்சூட்டில் பற்றிட்டு வர குணமாகும்
0 comments:
Post a Comment