ஸ்கிப்பிங் பயிற்சியால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் - தமிழர்களின் சிந்தனை களம் ஸ்கிப்பிங் பயிற்சியால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Saturday, January 18, 2014

  ஸ்கிப்பிங் பயிற்சியால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

  இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சனையும் படிப்படியாக குறையும்.
  www.puthiyatamil.net
  www.Puthiyatamil.net
    

  * முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங். 

  * உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன. 

  * உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது. 

  * கை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. இடுப்பு வலி உள்ளவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்டம் சீராகிறது. 

  * ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க ஸ்கிப்பிங் உதவுகிறது. மிக முக்கியமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு ஸ்கிப்பிங் அருமருந்தாகும். அதனால் நீங்களும் உடலுக்கும் ஸ்கிப்பிங்தானே என எண்ணாமல் ஆரோக்கியமான வாழ்விற்கு ஸ்கிப்பிங் செய்து பயன்பெறுவோம்.

  நன்றி -http://www.maalaimalar.com/2014/01/07140804/Skipping-the-health-benefits-o.html

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: ஸ்கிப்பிங் பயிற்சியால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top