|
www.Puthiyatamil.net |
தேவையான பொருட்கள்:
வெற்றிலை - 10
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 8 பல்
மிளகு - 1 டீஸ்பூன்
புளி - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
• நன்றாக கழுவி 9 வெற்றிலைகளை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
• 1 வெற்றிலையை நீளமான துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
• பூண்டு, மிளகு, சிறிது சீரகம் மூன்றையும் ஒன்றும் பாதியாக நன்றாக இடித்துக் கொள்ளவும்.
• புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
• பின்னர் இதில் இடித்து வைத்திருக்கும் மசாலா, அரைத்த வெற்றிலையை சேர்த்து சிறிது கிளறிய பின் புளிக் கரைசலை சேர்க்கவும்.
• கடைசியாக உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
• கொதி வரும் முன் இறக்கி இதில் வெட்டி வைத்துள்ள வெற்றிலையை தூவி இறக்கவும்.• சுவையான வெற்றிலை ரசம் தயார்.
* இந்த வெற்றிலை ரசம் மிகவும் சத்தானது. சளி தொல்லை, தொண்டை கரகரப்பு உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது.
0 comments:
Post a Comment