- தமிழர்களின் சிந்தனை களம் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Tuesday, July 8, 2014

  கருகரு கூந்தல் வளர்ச்சிக்கு அழகு டிப்ஸ்:

  சீயக்காய் 1 கிலோ, செம்பருத்திப்பூ 50, பூலாங்கிழங்கு (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் - ஷாம்பூ தேய்ப்பதன் பலன் கிடைக்கும்) 100 கிராம், காயவைத்த எலுமிச்சைத் தோல் (பொடுகை நீக்கும்) 25, காயவைத்த நெல்லிக்காய் - 50, பாசிப்பருப்பு (முடியைப் பளபளப்பாக்க) கால் கிலோ, மரிக்கொழுந்து (வாசனைக்கு) குச்சிகள் 20, கரிசலாங்கண்ணி இலை (முடியைக் கருப்பாக்க) 3 கப்.
  இவற்றை வெயிலில் காயவைத்து மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். வாரம் ஒரு முறைதலைக்கு எண்ணெய் தேய்த்து, அரைத்த சீயக்காய்த்தூளை வெறும் தண்ணீரில் மட்டும் கலந்து தலைக்குத் தேய்த்து அலசுங்கள். சாதக் கஞ்சியே தேவை இல்லை. கூந்தல் கருகருவெனச் செழிப்பாக வளரும். வாசனையாகவும் இருக்கும்.
  நல்லெண்ணெய் உடல் சூட்டைக் குறைப்பதுடன் முடியின் பொலிவுக்கும் உதவும்.
  இயற்கையான சாயத்திற்கும் குளிர்ச்சிக்கும் மருதாணி மிகவும் நல்லது. தலைக்குக் குளிக்கும்போது, உப்புத் தண்ணீர், சூடான தண்ணீர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கறிவேப்பிலை மூன்றையும் அரைத்து வடைகளாகத் தட்டி நிழலில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயைத் தினமும் தலையில் தடவிவந்தால் முடி உதிர்வது குறையும். கருமையாக வளரத் தொடங்கும்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top