உடலை இறுக்கிய உடைகள் அணியும் பெண்களின் கவனத்திற்கு…!! - தமிழர்களின் சிந்தனை களம் உடலை இறுக்கிய உடைகள் அணியும் பெண்களின் கவனத்திற்கு…!! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Friday, July 18, 2014

  உடலை இறுக்கிய உடைகள் அணியும் பெண்களின் கவனத்திற்கு…!!

  உடலை இறுக்கிய உடைகள் அணியும் பெண்களின் கவனத்திற்கு…!!
  இன்றைய இளம் பெண்கள் உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள்.
  இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என நவநாகரிக உடைகள் இப்பொழுது கடைகளில் கிடைக்கின்றன.
  பெண்கள் நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம் என்று கருதுகின்றனர்.
  ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உடலுக்கு நல்லதல்ல.
  பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர்வை வெளியேற முடியாமல், அதாவது வெளியே வர வாய்ப்பு இல்லாமல் கிருமிகளின் வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்துவிடும்.
  இதனால், வேர்க்குரு, உஷ்ணக் கட்டிகள் மற்றும் கோடைக் கால நோய்கள் சருமத்தைப் பாதிக்கும்.
  மேலும் அணியும் உள்ளாடைகள், சாக்ஸ் உட்பட இறுக்கமாக இருந்தால், உடலில் துர்நாற்றம் வீசுவதோடு, படை, சொறி சிரங்கு, அரிப்பு போன்றவை வரும்.
  உடலில் ரத்த ஓட்டம் குறைந்து, சுவாசத் திறன் பாதிக்கும்.
  தோள் பட்டை, முதுகு வலி ஏற்படலாம்.
  ஓரளவு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
  காற்று உட்புகவும், அதிகப்படியான வியர்வை வெளியேறவும் வழிவகுக்கும்.
  ஈரத்தை நன்கு உள்வாங்கும்.
  உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் தரக்கூடியது.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: உடலை இறுக்கிய உடைகள் அணியும் பெண்களின் கவனத்திற்கு…!! Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top