ரத்த அழுத்தம், நெஞ்சு சளிக்கு பூண்டு நல்ல மருந்து! - தமிழர்களின் சிந்தனை களம் ரத்த அழுத்தம், நெஞ்சு சளிக்கு பூண்டு நல்ல மருந்து! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Sunday, July 6, 2014

  ரத்த அழுத்தம், நெஞ்சு சளிக்கு பூண்டு நல்ல மருந்து!

  ரத்த அழுத்தம், நெஞ்சு சளிக்கு 
  பூண்டு நல்ல மருந்து!  இஞ்சி, பூண்டு இல்லாம எங்க வீட்டுல சமையலே இல்லைன்னு பலபேர் சொல்றதை கேள்விப்பட்டிருக்கேன். அதெல்லாம் சரிதான். ஆனா அதே இஞ்சியையும், வெள்ளைப்பூண்டையும் தனிப்பட்ட வகையில சாப்பிட்டு பாருங்க. அதுக்குள்ள மகிமையே தனிதான்.
  ஹைபிரஷர்னு சொல்லக்கூடிய உயர் ரத்த அழுத்தத்துக்கு இந்த பூண்டு நல்ல மருந்து. தினமும் வெள்ளைப்பூண்டை வேக வச்சோ, தீயில சுட்டோ சாப்பிட்டு வரலாம் ஹைபிரஷர் குறையுறதோட இதயத்துக்கு நல்லது. ரத்தக்குழாய்ல படியக்கூடிய கொழுப்பையும் வெளியேத்திரும். சிலபேர் பச்சையா சாப்பிடுவாங்க. அது நல்லதில்ல. பச்சையா சாப்பிட்டா அதிக பலன் கிடைக்கும்னு நினைக்காதீங்க. அதுல உள்ள ஆசிட் நேரடியா வயித்துக்குள்ள போனா வயித்துல பிரச்சினையை உண்டுபண்ணும். எதை எப்பிடி சாப்பிடணும்னு ஒரு வரைமுறை இருக்கு.
  பூண்டுச்சாறோட தண்ணி சேர்த்து சாப்பிடலாம். காலரா, நிமோனியா காய்ச்சல் வந்தா பூண்டுச்சாறோட தண்ணி கலந்து குடிச்சிட்டு வந்தா நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  வயிறு உப்புசம், பக்கவாதம், இதயநோய், வயித்துவலி மாதிரி பல நோய்களுக்கு வெள்ளைப்பூண்டு நல்ல மருந்தாகும்.
  நெஞ்சு சளி பிடிச்சா 50 மில்லி பால், 50 மில்லி தண்ணியில 10, 12 பூண்டுப்பல்லை உரிச்சிப்போட்டு வேக வைக்கணும். நல்லா வெந்ததும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள், தேவையான அளவு பனங்கல்கண்டு இல்லைனா சர்க்கரை சேர்த்து அடுப்பில இருந்து இறக்கணும். சூடு ஆறினதும் பருப்பு கடையுற மத்தை வச்சி நல்லா கடைஞ்சி ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி சாப்பிட்டு வந்தா சளி தொந்தரவு வந்த வழியைப்பார்த்து போயிரும்.
  வாய்வுக்கோளாறு உள்ளவங்க முழு வெள்ளைப்பூண்டை தீயில சுட்டு சாப்பிட்டுட்டு வந்தா நிச்சயமா பலன் கிடைக்கும்.
  - எம்.மரிய பெல்சின்

  மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t47389-topic#ixzz36eGpeTbx 
  Under Creative Commons License: Attribution
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: ரத்த அழுத்தம், நெஞ்சு சளிக்கு பூண்டு நல்ல மருந்து! Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top